ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா டெலிகாஸ்ட் எப்போது? இதோ வந்துருச்சுல அப்டேட்!

Published : Dec 29, 2025, 07:12 PM IST

Jana Nayagan Audio Launch Telecast Date 2026 : விஜய் நடிப்பில் உருவாகி தற்போது வெளியாக உள்ள ஜன நாயகன் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
13
Jana Nayagan Audio Launch Telecast Date 2026

விஜய் நடித்துள்ள ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமான முறையில் நடந்து முடிந்தது. ஜன நாயகன் விஜய்யின் கடைசி படம் என்பதால் மலேசியாவில் விஜய்க்கு FAREWELL கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பின்னணி பாடகர்கள், நடன கலைஞர்கள், நடன இயக்குநர்கள், படக்குழுவினர், இயக்குநர்கள் என்று சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அது மட்டுமின்றி விஜய்யின் அப்பா, அம்மாவும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

23
Vijay Jana Nayagan Music Launch Zee Tamil Time

மேலும், விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் சிவகாசி படத்தில் இடம் பெற்ற கோடம்பாக்கம் ஏரியா என்ற பாடலை பாடி அசத்தினார். வரும் ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன நாயகன் படம் திரைக்கு வருகிறது. உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை எந்த தொலைக்காட்சியில் பார்க்கலாம்? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

33
Thalapathy Vijay Last Movie Audio Launch Malaysia

ஜன நாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரும் ஜனவரி 4-ம் தேதி ‘ஜன நாயகன்’ இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மாலை 4:30 மணி முதல் இரவு 10.30 மணி வரை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அதே நேரத்தில் ZEE5 மொபைல் ஆப்பிலும் ரசிகர்கள் இந்த விழாவைக் கண்டு ரசிக்கலாம். அதோடு 2026ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஜன நாயகன் படத்தின் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories