இன்னும் கல்யாணம் கூட ஆகல; அழகு தேவதை: கௌரி சீரியல் நடிகை நந்தினி தூக்கிட்டு தற்கொலை!

Published : Dec 29, 2025, 06:49 PM IST

Gauri Serial Actress Nandini Suicide : கௌரி சீரியல் நடிகை நந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
14
Actress Nandini Death News Tamil

சின்னத்திரையை பொறுத்தவரையில் நடிகைகளின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே சீரியல் நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் நடித்து வந்த ராஜேஸ்வரி குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

24
Gauri Serial Actress Nandini Suicide

நடிகை ராஜேஸ்வரி உயிரிழந்து ஓரிரு வாரங்கள் ஆன நிலையில் மற்றொரு சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் சீரியல் நடிகைகளின் தற்கொலை தான் இப்போது அதிகரித்து வருகிறது. கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் கௌரி. இந்த சீரியலில் துர்கா மற்றும் கனகா என்று இரட்டை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

34
Small Screen Actors Death Mystery 2025, கௌரி சீரியல் நடிகை நந்தினி தற்கொலை

இந்த சீரியலானது கிட்டத்தட்ட 597 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. சீரியலில் முக்கியமான ரோலில் தான் நந்தினி நடித்து வந்தார். இந்த நிலையில் தான் நேற்று பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. கலைஞர் தொலைக்காட்சியும் நந்தினி உயிரிழந்ததை உறுதி செய்துள்ளது. நந்தினியின் தற்கொலைக்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

44
Tamil Serial Artist Nandini Suicide Reason

ஆந்திராவை சேர்ந்த நடிகை நந்தினி தெலுங்கு சீரியல்களில் நடித்திருந்த நிலையில் தமிழில் கௌர் என்ற சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதற்காக பெங்களூருவில் தங்கியிருந்து ஷூட்டிங்கிற்காக மட்டுமே வந்து சென்றுள்ளார். கௌரி சீரியல் நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவருக்கு வயது 30க்குள் தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இன்னும்திருமணம் கூட ஆகவில்லை. இந்த நிலையில் எப்படி தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வந்தது என்று தெரியவில்லை.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories