கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பேமஸ் ஆனவர் தாமரைச் செல்வி. நாடகக் கலைஞரான இவர், இந்நிகழ்ச்சியில் 90 நாட்களுக்கு மேல் இருந்தாலும் இறுதிப்போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை நழுவவிட்டார்.
பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்த தாமரை, அந்நிகழ்ச்சியில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேற வாய்ப்பு கிடைத்தும் அதனை வேண்டாம் என்று மறுத்துவிட்டார். இதன்மூலம் மக்களின் அபிமான போட்டியாளராகவும் மாறினார் தாமரை. இந்நிகழ்ச்சிக்கு பின்னர் தாமரைக்கான ரசிகர் வட்டமும் பெரிதானது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை செல்லும் வாய்ப்பை நூலிழையில் நழுவவிட்ட தாமரைக்கு அடுத்ததாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட தாமரை இதில் இறுதிப்போட்டி வரை முன்னேறி அசத்தினார். இதில் மூன்றாம் இடம் பிடித்தார் தாமரை.