Jailer
ரஜினிகாந்தின் கம்பேக் திரைப்படமாக வெளியாகி உள்ளது ஜெயிலர். நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் ஓய்வுபெற்ற சிறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரஜினி. சிலைக்கடத்தலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படம் நேற்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் சுமார் 900 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது.
அதன்படி ஜெயிலர் படமும் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் முதல் நாளிலேயே விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு போன்ற படங்களின் லைஃப் டைம் கலெக்ஷனை தட்டித்தூக்கி மாஸ் காட்டி உள்ளது. அமெரிக்காவில் ரஜினி பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக இருந்தாலும், தமிழ்நாட்டில் அவரால் முதலிடத்தை பிடிக்க முடியவில்லை. குறிப்பாக விஜய் - நெல்சன் கூட்டணியில் வெளிவந்த பீஸ்ட் படம் தமிழகத்தில் முதல் நாள் வசூலித்ததை விட ஜெயிலருக்கு கம்மி வசூலே கிடைத்துள்ளது.
ஜெயிலர் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் ரூ.29 கோடி வசூலித்து உள்ளதாம். ரஜினி நடிப்பில் இதற்கு முன் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தின் வசூலை விட இது குறைவு தான். அண்ணாத்த திரைப்படம் முதல் நாளில் ரூ.34 கோடி வசூலித்து இருந்தது. அதேபோல் அஜித்தின் வலிமை 36 கோடியுடனும், விஜய்யின் பீஸ்ட் 38 கோடி உடனும் தமிழ்நாட்டில் பாக்ஸ் ஆபிஸ் சாதனைக்கு சொந்தக்காரர்களாக உள்ளனர். ஜெயிலர் படம் முதல் நாளில் உலகளவில் ரூ.70 கோடிக்கு மேல் வசூலித்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... Jailer Box Office: இலங்கையில் முதல் நாளே வசூலில் மாஸ் காட்டிய 'ஜெயிலர்'..! எத்தனை கோடி தெரியுமா?