ஷூட்டிங் பண்ணும்போதே இது பிளாப் ஆகிடும்னு தெரியும்... விஜய் படத்தை ஓப்பனாக போட்டுத்தாக்கிய தமன்னா

Published : Jul 31, 2023, 03:32 PM ISTUpdated : Aug 01, 2023, 05:35 PM IST

ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகை தமன்னா, சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நடிகர் விஜய்யின் தோல்வி படம் குறித்து பேசி இருக்கிறார்.

PREV
14
ஷூட்டிங் பண்ணும்போதே இது பிளாப் ஆகிடும்னு தெரியும்... விஜய் படத்தை ஓப்பனாக போட்டுத்தாக்கிய தமன்னா
sura

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தமன்னா. இவர் தமிழில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படத்தின் மூலம் நடிகர் ரஜினிகாந்த் உடன் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ளார். நெல்சன் இயக்கியுள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளும் பிசியாக நடைபெற்று வரும் நிலையில், நடிகை தமன்னா அண்மையில் யூடியூப் சேனல் நடத்திய ரசிகர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார்.

24
sura

அந்த நிகழ்வில் சுறா படத்தின் தோல்வி குறித்து பேசி உள்ளார் தமன்னா. அதில் அவர் கூறியதாவது : “சில சமயங்களில் படம் எனக்கு பிடிக்கும், ஆனால் அதில் வரும் சில காட்சிகள் மோசமாக இருக்கும். ஏண்டா நடிச்சோம்னு தோணவச்ச படங்களில் சுறாவும் ஒன்று. ஷூட்டிங் நடைபெறும் போதே இந்தப் படம் நிச்சயம் ஒர்க் அவுட் ஆகாது என எனக்கு தெரியும். இனிமே அதுமாதிரி கண்டிப்பா நடிக்க மாட்டேன்.

இதையும் படியுங்கள்... புஷ்பா 2-வில் சமந்தாவுக்கு பதில் கவர்ச்சி நடனம் ஆடப்போவது இந்த நடிகையா? - லீக்கான தகவல்

34
sura

சுறா படம் ரிலீஸ் ஆகும் போது எனக்கு எந்தவித எதிர்பார்ப்புமே இல்லை, ஏனெனில் ஷூட்டிங் பண்ணும்போதே படத்தோட ரிசல்ட் எனக்கு தெரியும். அப்படி பிடிக்காவிட்டாலும் நடித்துக் கொடுக்க வேண்டும் அது தான் நடிகர்களின் கடமை. ஏனெனில் அப்படத்தை நம்பி நிறைய பேர் வேலை பார்க்கிறார்கள், அவர்களை பாதித்துவிடக் கூடாது என்பதனால் பொறுப்பாக இருக்க வேண்டும்” என பேசி உள்ளார்.

44
sura

சுறா படத்தை இப்படி ஓப்பனாக போட்டுத்தாக்கி பேசி இருக்கும் நடிகை தமன்னாவின் பேச்சைக் கேட்ட விஜய் ரசிகர்கள் அவரை சாடி வருகின்றனர். நடிகை தமன்னா விஜய்யுடன் நடித்த ஒரே ஒரு திரைப்படம் சுறா தான். அப்படத்துக்கு பின்னர் இருவரும் மீண்டும் இணையவே இல்லை. சுறா படத்தை எஸ்.ஏ.ராஜ்குமார் இயக்கினார். இவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். அவர் இயக்கிய முதல் படம் சுறா, இது நடிகர் விஜய்யின் கெரியரில் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... சபாஷ்... ஆண்களுக்கு செம்ம நோஸ் கட் கொடுத்த ரேணுகா..! ஜீவனந்தத்துக்கு எதிராக குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories