தளபதி விஜய்யை வைத்து கடைசியாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான 'பீஸ்ட்' திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாத நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'ஜெயிலர்' படத்தை இயக்கி வருகிறார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு, இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் இப்படத்தை இந்த வருட தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வரும் பிரபல நடிகர் நெல்சன் திலீப் குமாருக்கு ஆச்சரிய பரிசு ஒன்றை கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் ஜெயிலர் படத்தை அண்ணாத்த படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என என கார்த்திருக்கின்றனர் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள்.