கோலிவுட்டில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் லேட்டஸ்ட் ஆக இணைந்திருப்பவர் நெல்சன். இதற்கு காரணம் அவரின் சமீபத்திய பிளாக்பஸ்டர் திரைப்படமான ஜெயிலர் தான். பீஸ்ட் தோல்விக்கு பின் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட நெல்சன், ஜெயிலர் மூலம் அதையெல்லாம் தகர்த்தெறிந்து தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.