Jailer 2 Day 1 Box Office : ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? வாஷ் அவுட் ஆன ஜனநாயகன் ரெக்கார்டு!

Published : Oct 16, 2026, 06:41 AM IST

Jailer 2 Day 1 Box Office Collection : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீஸ் ஆகி உள்ள ஜெயிலர் 2 திரைப்படம் முதல் நாளே ஜனநாயகன் படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.

PREV
15
Jailer 2 Box Office Collection

ரொம்ப நாளா வெயிட் பண்ணிட்டு இருந்த ரஜினிகாந்த் - நெல்சன் காம்போவோட 'ஜெயிலர் 2' தியேட்டர்கள்ல ரிலீஸ் ஆகிடுச்சு. முதல் பாகம் பாக்ஸ் ஆபிஸ்ல பண்ண அதே மேஜிக்கை ரெண்டாம் பாகத்துலயும் நெல்சன் - ரஜினி கூட்டணி கொண்டு வந்திருக்காங்க. தன் குடும்பத்துக்காக எந்த எல்லைக்கும் போற திகார் சென்ட்ரல் ஜெயிலோட முன்னாள் ஜெயிலர் முத்துவேல் பாண்டியன், இந்த முறை புது சவால்களோட வந்திருக்காரு.

சொந்த பையனையே கொல்ல வேண்டியதா போச்சேங்குற குற்ற உணர்ச்சி அவரை தொடர்ந்து துரத்திக்கிட்டே இருக்கு. தான் தான் பையனை கொன்னோம்னு பொண்டாட்டி, மருமகள், பேரனுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்கிற பயம் அவருக்குள்ள இருக்கு. இந்த குற்ற உணர்ச்சியில இருந்து அவர் தப்பிக்க நினைக்கிறது தான் ஜெயிலர் 2 படத்தோட முக்கிய கதைக்களம்.

Jailer 2 Full Movie Review : ரஜினி பந்தயம் அடித்தாரா? பல்பு வாங்கினாரா? ஜெயிலர் 2 விமர்சனம் இதோ

25
ஜெயிலர் 2 ஸ்பெஷல் என்ன?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை ஸ்கிரீன்ல எப்படி காட்டணும்னு நெல்சன் திலீப்குமாருக்கு ரொம்ப நல்லாவே தெரிஞ்சிருக்கு. அதை நாம முதல் பாகத்துலயே பார்த்தோம். ஜெயிலர் முதல் பாகம் எங்க முடிஞ்சதோ, அங்க இருந்து ரெண்டாம் பாகம் தீயா ஆரம்பிக்குது. ரஜினி ரசிகர்களுக்காகவே இந்த படத்தை முழுசா எடுத்திருக்காங்க. இந்திய சினிமாவோட பல முன்னணி நடிகர்கள் இந்த படத்துல கேமியோ ரோல்ல வந்திருக்கிறது ரொம்பவே ஸ்பெஷல்.

முதல் பாகத்துல வந்த மோகன்லாலோட 'மேத்யூ', சிவராஜ்குமாரோட 'நரசிம்மா', ஜாக்கி ஷெராஃப்போட 'காம்தேவ்' ஆகிய மூணு கேரக்டர்களும் ரெண்டாம் பாகத்துலயும் வராங்க. மூணு பேரோட கேரக்டர்களையும் நெல்சன் ரொம்ப ஸ்டைலா காட்டியிருக்காரு. ஆனா, முதல் பாகத்துல மோகன்லாலோட மேத்யூ கேரக்டருக்கு இருந்த அந்த மாஸ், ரெண்டாம் பாகத்துல கொஞ்சம் மிஸ் ஆகுதோனு தோணுது. இந்த ரெண்டாம் பாகத்துல ரொம்ப ஸ்டைலிஷான என்ட்ரி யாருக்குனா, அது ஹிருத்திக் ரோஷன் நடிச்சிருக்க 'ரோடி' கேரக்டருக்கு தான்.

35
ஜெயிலர் 2 ப்ளஸ், மைனஸ் என்ன?

முதல் பாகத்தை விட இதுல வில்லன்களோட எண்ணிக்கை அதிகம். இருந்தாலும், விநாயகம் நடிச்ச 'வர்மன்' கேரக்டர் தான் ஜெயிலர் சீரிஸ்லயே, ஏன் தென்னிந்திய சினிமாவுலயே பெஸ்ட் வில்லனா இன்னைக்கு வரைக்கும் இருக்கு. எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, வித்யா பாலன், மிதுன் சக்கரவர்த்தி எல்லாரும் சூப்பரா நடிச்சிருந்தாலும், விநாயகனோட வர்மன் செட் பண்ண பெஞ்ச்மார்க்கை யாராலயும் தொட முடியல.

அனிருத் ரவிச்சந்தரோட மியூசிக் தான் படத்தோட மிகப்பெரிய பிளஸ். ஒவ்வொரு சீன்லயும் அனிருத்தோட பிஜிஎம் படத்தை வேற லெவலுக்கு கொண்டு போகுது. படத்தோட மூடை அப்படியே மெயின்டெயின் பண்றது அனிருத் தான். படம் மொத்தமா ஆடியன்ஸை சீட் நுனியில உட்கார வைக்குது. எமோஷனல் சீன்ஸ்ல இந்த வயசுலயும் ரஜினியோட நடிப்பு ஆச்சரியப்பட வைக்குது. முத்துவேல் பாண்டியன் கேரக்டரா ரஜினி ரொம்ப இயல்பா மாறியிருக்காரு.

45
ஜெயிலர் 3 வருது

நடிகர்களோட சிறப்பான நடிப்பு படத்துக்கு பெரிய பலம். ஸ்கிரீன் பிரசன்ஸ்ல ரஜினி மிரட்டியிருக்காரு. 'போதி கல்பக்' கேரக்டர்ல எஸ்.ஜே. சூர்யா பின்னி பெடலெடுத்துட்டாரு. வித்யா பாலன் நடிச்ச 'காந்தா கல்பக்' கேரக்டர், சமீப காலத்துல நாம பார்த்த ரொம்ப ஸ்ட்ராங்கான லேடி வில்லன் கேரக்டர்னு சொல்லலாம். 3-ம் பாகத்துக்கான லீடோட படத்தை முடிச்சிருக்காங்க. ஜெயிலர் 3-ல நெல்சன் என்னென்ன சர்ப்ரைஸ் வெச்சிருக்காருனு பொறுத்திருந்து தான் பார்க்கணும்.

55
ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எவ்வளவு?

இந்த நிலையில ஜெயிலர் 2 படத்தோட பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகிருக்கு. அதன்படி ஜெயிலர் 2 திரைப்படம் முதல் நாள்ல உலகளவில் ரூ.125 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளதா சாக்னில்க் தளத்தின் தரவுகள் தெரிவிக்குது. இதில் இந்தியாவுல மட்டும் ரூ.70.25 கோடியும், ஓவர்சீஸில் ரூ.55 கோடியும் வசூல் செஞ்சிருக்கு. அதிலும் அதிக பட்சமா தமிழ் வெர்சன் ரூ.43.35 கோடியும், தெலுங்குல ரூ.12.50 கோடியும், இந்தில ரூ.3.50 கோடியும் வசூல் செய்துள்ளதாம். இதன்மூலம் 2026-ம் ஆண்டுல முதல் நாளில் அதிக வசூல் செஞ்ச தமிழ் படம் என்கிற சாதனைய ஜெயிலர் 2 படைச்சிருக்கு. இதற்கு முன் விஜய்யின் ஜனநாயகன் படம் தான் இந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் இருந்தது. அப்படம் முதல் நாளில் 20.82 கோடி வசூலித்திருந்தது. அதனை ஜெயிலர் 2 தகர்த்துள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories