தாதா சாஹேப் பால்கே திரைப்பட விழாவிற்கு போன ஜெய் பீம்..விருது வென்ற நாயகன்...

Kanmani P   | Asianet News
Published : May 03, 2022, 02:03 PM IST

கடந்தாண்டு இறுதியில் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்ததோடு எக்கசக்க விருதுகளையும் அள்ளி வரும் ஜெய் பீம் தற்போது தாதா சாஹேப் பால்கே திரைப்பட விழாவில் இரு விருதுகளை தட்டியுள்ளது.

PREV
18
தாதா சாஹேப் பால்கே திரைப்பட விழாவிற்கு போன ஜெய் பீம்..விருது வென்ற நாயகன்...
jai bhim

அரசியல்வாதிகள், பிரபலங்கள் என பலதரப்பட்டவர்களின் பாராட்டுகளை பெற்று வந்த ஜெய் பீம். பல விருதுகளை குவித்து வருகிறது.   

28
jai bhim

இருளர் என்னும் பழங்குடியினர் குறித்த தாக்கத்தை தனது மனதில் ஆழமாக பதிய வைத்து விட்டது என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

38
jai bhim

டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவான இந்த படத்தை சூர்யா - ஜோதியாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டைன்மெண்ட் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.

48
jai bhim

உண்மை கதையின் தழுவலான இந்த படத்தில் சூர்யாவக்கீலாகவும், லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன்முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். 

58
jai bhim

ஒளிப்பதிவு    எஸ்ஆர் கதிர், சீன் ரோல்டனின் இசையில் உருவான இந்த     படத்தில் இடம்பெற்றிருந்த காலண்டர் படத்தின் பெரும் சர்ச்சையில் சிக்கியது. 

68
jai bhim

2021 இன் சிறந்த தமிழ் மற்றும் இந்திய படங்களில் ஒன்று" என்று பட்டியலிடப்பட்ட இந்த படம் 94வது அகாடமி விருதுகளில் பரிந்துரைக்கப்பட்ட 276 திரைப்படங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெறத் தவறியது. 

78
jai bhim

அதோடு நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய் பீம் என்னும் சிறந்த திரைப்படத்தை தயாரித்ததற்காக  2டி நிறுவனத்துக்கும், சிறந்த நடிகருக்காக சூர்யாவிற்கும், சிறந்த நடிகைகாக லிஜோமோல் ஜோஸ்க்கும் கிடைத்தது.

88
jai bhim

இந்நிலையில் மீண்டும் ஒரு கிரீடமாக தாதா சாஹேப் பால்கே திரைப்பட விழாவிற்கு சென்றுள்ளது ஜெய் பீம். அங்கு சிறந்த திரைப்படத்திற்கான விருது ஜெய் பீமிற்கும், சிறந்த துணை நடிகருக்கான விருது ராஜகண்ணுவாக நடித்த மணிகண்டனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories