ஒரே இடத்தில் விஜய்-அஜித் பட ஷூட்டிங்! 11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நிகழும் ‘தல-தளபதி’யின் சர்ப்ரைஸ் சந்திப்பு

Published : May 03, 2022, 12:44 PM IST

Vijay - Ajith meet : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் அஜித்தும் விஜய்யும் நேரில் சந்தித்துக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

PREV
15
ஒரே இடத்தில் விஜய்-அஜித் பட ஷூட்டிங்! 11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நிகழும் ‘தல-தளபதி’யின் சர்ப்ரைஸ் சந்திப்பு

தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் அறிமுகமாகி, இன்று உச்ச நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் அஜித் - விஜய். இவர்கள் இருவருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அஜித்தும் விஜய்யும் எப்போதுமே நண்பர்களாக இருந்தாலும், அவர்களது ரசிகர்கள் அவ்வாறு இருப்பதில்லை. அடிக்கடி எலியும் பூனையுமாக சண்டையிட்டுக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

25

அஜித்தும், விஜய்யும் இதனை கண்டித்த போதும் இந்த சண்டை என்பது முடிந்தபாடில்லை. ஆரம்பத்தில் இருந்தே நட்புபாராட்டி வரும் அஜித் - விஜய், கடைசியாக சந்தித்துக் கொண்டது என்றால் அது மங்காத்தா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தான். விஜய் நடித்த வேலாயுதம் படத்தின் ஷுட்டிங்கும், அஜித் நடித்த மங்காத்தா படத்தின் ஷூட்டிங்கும் ஒரே இடத்தில் நடந்தது.
 

35

அப்போது நடிகர் விஜய்யும், அஜித்தும் சந்தித்துக் கொண்டபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்த சந்திப்பு நிகழ்ந்து 11 ஆண்டுகள் ஆகிறது. இதையடுத்து அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை. இருப்பினும் இருவருக்கும் இடையேயான நட்பு தொடர்ந்து வருகிறது.

45

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய், நண்பர் அஜித் மாதிரி கோர்ட் சூட் அணிந்து வந்ததாக கூறியது மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது.

55

இந்நிலையில், நடிகர் விஜய்யும், அஜித்தும் மீண்டும் சந்தித்துக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அஜித் நடித்து வரும் ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. தற்போது விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பும் இன்று முதல் அங்கு நடைபெற உள்ளது. இதனால் விஜய் - அஜித் மீண்டும் சந்தித்துக் கொள்ள அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Actor Vivek Road : நடிகர் விவேக் பெயருடன் கூடிய சாலை திறப்பு - சொன்னதை செய்த முதல்வருக்கு குவியும் பாராட்டு

Read more Photos on
click me!

Recommended Stories