ரசிகர்களால் மில்க் பியூட்டி என செல்லமாக அழைக்கப்படுபவர் தமன்னா. இதுவரை தமிழில் அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர், தற்போது முதன்முறையாக ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது. அப்படத்திற்காக தமன்னா ஆடிய காவாலா டான்ஸ் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகிறது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களிலும் அவை ஆக்கிரமித்து உள்ளன.