sivaangi
தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் காமெடியனாக நடித்துள்ளவர் கூல் சுரேஷ். சமீப காலமாக இவர் டிரெண்டிங் ஸ்டார் ஆக மாறி இருக்கிறார். இதற்கு காரணம் சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் தான். அப்படத்திற்கும் இவருக்கும் சம்பந்தமில்லை என்றாலும், எந்த படம் பார்க்க தியேட்டர் போனாலும், அங்கு ‘வெந்து தணிந்தது காடு.. சிம்புவுக்கு வணக்கத்த போடு’ என அவர் பேசிய டயலாக் சோசியல் மீடியாவில் வைரல் ஆனதோடு, அப்படத்தின் புரமோஷனுக்கும் பெரிதும் உதவியது.
தற்போது நடிகர் கூல் சுரேஷிற்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. அந்த வகையில் அவர் நடிப்பில் தற்போது டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்துள்ளார் கூல் சுரேஷ். இப்படம் வருகிற ஜூலை 28-ந் தேதி திரைக்கு வர உள்ளது. தற்போது அப்படத்திற்கான புரோமோஷன் பணிகளில் பிசியாக உள்ளார் கூல் சுரேஷ்.
அந்த வகையில் நேற்று சென்னையில் போக்குவரத்து காவலர்களின் உதவியுடன் சாலை விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு டிடி ரிட்டர்ன்ஸ் படத்தை புரமோட் செய்தார் கூல் சுரேஷ். அப்போது சாலையில் சீட் பெல்ட், ஹெல்மெட் அணியாமல் வருபவர்களிடம் கட்டாயம் அதெல்லாம் அணிய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்திய அவர், டிரிங்க் அண்ட் டிரைவ் செய்யக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.
sivaangi
இந்த சமயத்தில் அந்த வழியாக காரில் வந்த சிவாங்கியை நடுரோட்டில் மடக்கிப் பிடித்தார் கூல் சுரேஷ், அப்போது சிவாங்கி சீட் பெல்ட் அணியாமல் வந்ததை பார்த்ததும், அவரிடம் பிரபலங்களாக இருக்கும் நாமே இப்படி செய்யலாமா, முதல்ல சீட் பெல்ட் போடு சிவாங்கினு சொல்ல, அங்கு டிராபிக் ஜாம் ஆனது. இதைப்பார்த்து பதறிப்போன சிவாங்கி, ஆள விடுடா சாமினு கிளம்ப நினைக்க அவரை செல்லவிடாமல் சாரி சொல்லிட்டு போ என கூல் சுரேஷ் சொன்னதும் வேறுவழியின்றி சாரினு சொல்லிவிட்டு கிளம்பினார். அவரிடம் டிடி ரிட்டர்ன்ஸ் பட போஸ்டரை காட்டி டிடி-னா டிரிங் அண்ட் டிரைவ், குடிச்சிட்டு வண்டி ஓட்டாத சிவாங்கினு சொல்லி நடுரோட்டில் டேமேஜ் செய்துவிட்டார் கூல் சுரேஷ்.
இதையும் படியுங்கள்... 2 நாள் சாப்பிட கூட காசு இல்லாமல் பட வாய்ப்பு தேடிய... சூரியின் இன்றைய சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?