Published : May 12, 2022, 12:32 PM ISTUpdated : May 12, 2022, 01:06 PM IST
Deepika Padukone Pregnant :வித்தியாசமான ஆடையணிந்து விமான நிலையத்திற்கு வந்த ரன்வீர் சிங், கையை வைத்து குழந்தையை தாலாட்டுவது போல் சைகையை காண்பித்து கன்பியூஸ் செய்துள்ளார்.
வித்தியாசமான உடைகளிலும் ஹாட் போஸ்களாலும் ரசிகர்களை கவர்ந்தவர் தீபிகா படுகோனே முதலில் கன்னடத்தில் அறிமுகமாகி இருந்தார்.
28
Deepika Padukone
கன்னட மொழிகளில் வெளியாகிய ஐஸ்வர்யா என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான தீபிகா படுகோன் பின்னர் பாலிவுட்டில் ஓம் சாந்தி என்னும் படம் மூலம் என்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர் பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் முன்னணி நாயகர்களுடன் நடித்ததோடு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் தீபிகா படுகோன்.
38
Deepika Padukone
இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி இருந்தாலும் இந்த படத்தில் தீபிகா படுகோன் ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருந்தார்.
48
Deepika Padukone
ஹாலிவுட் மட்டுமின்றி சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்றவர் தீபிகா படுகோன். இவர் உலக சாதனையாளர் விருதை வென்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமைக்குரியவர்.
58
Deepika Padukone
தற்போது பிரபாஸுக்கு ஜோடியாக பான் இந்தியா மூவியிலும், மூலம் பாலிவுட்டில் கெஹ்ரயான் என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி ஓடிடியில் ரிலீசானது.
68
Deepika Padukone
இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு பாலிவுட் முன்னணி நாயகர்களில் ஒருவராக இருக்கும் ரன்வீர் சிங்கை காதல் கரம்பிடித்தார். இவர்கள் சமீபத்தில் திருமண நாளை கோலாகலமாக கொண்டாடி இருந்தனர்.
78
ranveer singh
இந்நிலையில் சமீபத்தில் விமான நிலையத்திற்கு வித்தியாசமான உடை அணிந்து வந்திருந்த ரன்வீர் சிங் செய்த சைகை ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
88
ranveer singh
பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுத்த ரன்வீர் சிங் குழந்தையைத் தாலாட்டுவது போன்ற சைகையை செய்துள்ளார். இதனால் ஒருவேளை தீபிகா படுகோன் கர்ப்பமாக இருக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.