பின்னர் ஸ்ருதிஹாசன் தமிழில், ஹீரோயினாக 'ஏழாம் அறிவு' படத்தில் நடித்த போது, சூர்யாவுடன் காட்டிய நெருக்கம் தான் சித்தார்த் - ஸ்ருதிஹாசன் பிரிவுக்கு காரணம் என புது புரளி ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது 'ஏழாம் அறிவு' படத்தில் நடித்த போது, ஸ்ருதிஹாசன் - சூர்யாவுடன் அவுட்டிங் சென்றதாகவும், அது பிடிக்காத சித்தார்த் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. எனவே தனக்கு இனி சித்தார்த்துடன் செட்டாகாது என்ற மைண்ட் செட்டுக்கு வந்த ஸ்ருதிஹாசன், சித்தார்த்துடன் பிரேக் அப் செய்தார். இதைத்தொடர்ந்து இவர்கள் இருவருமே தங்களுடைய திரையுலக வாழ்க்கையில் மட்டுமின்றி அடுத்தடுத்த காதல் வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்த விவாகரத்துக்குப் பின்னர் தான், ஸ்ருதிஹாசன் உடன் காதல் வயப்பட்டு பிரேக் அப் செய்து கொண்ட பின்னர் சமந்தாவுடன் காதலில் கிசுகிசுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து தற்போது 'காற்று வெளியிடை' படத்தின் நாயகி, அதிதி ராவை காதலித்து வருவதோடு, இவர்கள் இருவரும் மும்பையில் லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.