'ராஜா ராணி 2' சீரியலில் அதிரடியாக இப்படி ஒரு மாற்றம் நடக்க போகுதா? ஆல்யாவுக்காக போடப்பட்ட பக்கா பிளான்!

Published : Dec 02, 2021, 01:58 PM ISTUpdated : Dec 02, 2021, 02:00 PM IST

விஜய் டிவி (Vijay TV) தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'ராஜா ராணி 2' (Raja Rani 2 Serial) சீரியலில் நாயகியாக நடித்து வரும் ஆல்யா மானசா (Alya Manasa) தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாகி உள்ளதால், இவருக்காக இந்த சீரியலில் அதிரடி மாற்றத்தை கொண்டு வர, சீரியல் குழு பக்கா பிளான் செய்துள்ளதாக கூறப்படுகிறது.  

PREV
111
'ராஜா ராணி 2' சீரியலில் அதிரடியாக இப்படி ஒரு மாற்றம் நடக்க போகுதா? ஆல்யாவுக்காக போடப்பட்ட பக்கா பிளான்!

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், அனைத்து சீரியல்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல விமர்சனம் கிடைத்து வருகிறது. இதற்க்கு முக்கிய காரணம், எல்லா சீரியல்களும் ஒரே மாதிரி இல்லாமல் தனித்துவமான கதைக்களத்தோடு ஒளிபரப்பாகி வருவது தான்.

 

211

அந்த வகையில் ஐபிஎஸ் அதிகாரியாக போராடி வரும் ஒரு பெண்ணை பற்றிய கதையை மையமாக வைத்தும், அவள் தன்னுடைய கணவரின் திறமையை எப்படி வெளியுலகத்திற்கு கொண்டுவருகிறாள் என்பதையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் சீரியல் 'ராஜா ராணி 2'.

 

311

இந்த சீரியலில் ஏற்கனவே 'ராஜா ராணி' சீரியலில் செம்பா என்கிற குடும்ப குத்துவிளக்கு கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆல்யா மானசா நாயகியாக நடித்து வருகிறார்.

 

411

இவர் 'ராஜா ராணி' சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு 'ஐலா' என்கிற மகள் ஒருவரும் உள்ளார்.

 

511

திருமணமாகி குழந்தை பெற்ற பின்னர், படு குண்டாக மாறிய ஆல்யா பின்னர் தன்னுடைய உடல் எடையை குறித்து, இந்தியில் இருந்து ரீமேக் செய்யப்பட்டு தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் 'ராஜா ராணி 2 ' சீரியலில் நடித்து வருகிறார்.

 

611

இந்த சீரியல் மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், தற்போது ஆல்யா இரண்டாவது முறையாக தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை சமீத்தில் உறுதி செய்தார்.

 

711

எனவே இந்த சீரியலில் இருந்து இவர் விலக உள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியானது. ஆனால், அதனை ஆல்யாவின் கணவர் மறுத்த நிலையில் தற்போது இந்த சீரியலில் ஆல்யாவுக்காக சீரியலில் அதிரடி மாற்றங்கள் சிலவற்றை ஏற்படுத்த சீரியல் குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

811

அதாவது, இதுவரை 'ராஜா ராணி 2' சீரியலில் இதுவரை தங்களுக்குள் இருந்த காதலை வெளிப்படுத்தாமல் இருந்த கணவன் மனைவி ஆல்யா - சித்து இடையே கொஞ்சம் லவ் ட்ராக் ஓட துவங்கியுள்ளது. இருவரும், குக்கிங் போட்டியில் கலந்து கொள்ள வெளியூருக்கும் சென்றுள்ளனர்.

 

911

எனவே இவர்களுக்கும் நெருக்கத்தை கூட்டி, உண்மையாக கர்ப்பமாக இருக்கும் ஆல்யாவை சீரியலிலும் கர்ப்பமானவராக நடிக்க வைக்க பக்கா பிளான் ஒன்றை சீரியல் குழு போயுள்ளதாக கூறப்படுகிறது.

 

1011

ஒரு வேலை இப்படி ஒரு மாற்றம் சீரியலில் கொண்டு வந்தால், தொடர்ந்து ஆல்யா சீரியலில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

1111

ஏற்கனவே 'பாண்டியன் ஸ்டார்' சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா உண்மையாக கர்ப்பமாக இருந்த போது, தொடர்ந்து கர்ப்பிணி கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

click me!

Recommended Stories