கையில் குழந்தையோடு ஷாருகான்..! அட இது அட்லீ - பிரியா தம்பதியின் மகனா? வைரலாகும் புகைப்படம்..!

First Published | Feb 7, 2023, 3:29 PM IST

நடிகர் ஷாருகான் கையில் குழந்தை ஒன்றை வைத்து கொஞ்சுவது போல் வெளியான புகைப்படத்தை பார்த்து, ரசிகர்கள் இது அட்லீயின் குழந்தையா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

தமிழ் திரையுலகின் முன்னணி இளம் இயக்குனர்களில் ஒருவர் அட்லீ, 'ராஜா ராணி' படத்தின் வெற்றிக்கு பின்னர், தொடர்ந்து... மூன்று முறை தளபதி விஜய்யை வைத்து படம் இயக்கிய இவர், தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி உள்ளார்.

இந்த படத்தின் மூலம், கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பாலிவுட்டில் முதல் முறையாக ஹீரோயினாக அறிமுகமாகிறார். அதே போல், அனிரூத் முதல் முறையாக இந்த படத்தின் மூலம் பாலிவுட் திரையுகளில் கால் பதிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏகே 62வில் இருந்து நீக்கம்.. சைலண்டாக சம்பவம் செய்ய தயாராகும் விக்னேஷ் சிவன் - விக்கியின் அடுத்த பிளான் இதுவா?

Tap to resize

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இயக்குனர் அட்லீ - பிரியா தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் கழித்து குழந்தை பிறந்துள்ள நிலையில், அட்லீயின் குழந்தையை பார்க்க, ஷாருக்கான் அட்லீ வீட்டுக்கு திடீர் விசிட் அடித்ததாக கூறப்பட்டது.

இதை தொடர்ந்து தற்போது ஷாருகான்... குழந்தை ஒன்றிய கையில் வைத்து கொஞ்சியபடி புகைப்படம் ஒன்று வெளியான நிலையில், ரசிகர்கள் பலரும் இது அட்லீயின் குழந்தையா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

17 வயதில் எல்லை மீறும் பேபி சாரா! கையில் சிகரெட்டுடன்.. குப்பு.. குப்புனு புகையை ஊதி தள்ளும் ஷாக்கிங் போட்டோஸ்

அதே நேரம் இது அட்லீ - பிரியா குழந்தை இல்லை என்பது தெரியவந்துள்ளது. எனினும்... அட்லீயின் மனைவி பிரியா சமூக வலைத்தளத்தில் மிகவும்  ஆக்டிவாக இருப்பவர் என்பதால், விரைவில் குழந்தையின் புகைப்படத்தை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos

click me!