இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். சிம்புவின் போடா போடி மூலம் திரையுலகில் இயக்குனராக எண்ட்ரி கொடுத்த விக்கி, அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து நானும் ரெளடி தான் என்கிற கமர்ஷியல் படத்தை கொடுத்ததன் மூலம் பாபுலர் ஆனார். இதையடுத்து சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார்.