இந்த வாரமும் எஸ்கேப் ஆகப்போகிறாரா சாச்சனா? லீக்கான பிக் பாஸ் ஓட்டிங் நிலவரம்!

First Published | Dec 6, 2024, 10:24 AM IST

Bigg Boss Tamil season 8 Elimination : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் கம்மியான வாக்குகளை பெற்று வெளியேற உள்ள போட்டியாளர் குறித்த நிலவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Arun, Sachana

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் வார வாரம் ஒரு டாஸ்க் நடத்தப்படும். அந்த வகையில் இந்த வாரம் முழுக்க ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்ஸ் டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இந்த டாஸ்க் பல்வேறு களேபரங்களுடன் நடைபெற்றது. குறிப்பாக இந்த டாஸ்க் தொடங்கிய முதல் நாளே ஏஞ்சல்களை கொடுமைப்படுத்தி டெவில்கள் கதறவிட்டனர்.

Bigg Boss Tamil season 8 contestants

குறிப்பாக மஞ்சரி, சாச்சனா ஆகியோர் கொடுத்த டார்ச்சர் தாங்க முடியாமல் அன்ஷிதா, பிக் பாஸ் வீட்டை விட்டே வெளியே செல்ல முயன்ற சம்பவமும் அரங்கேறின. பின்னர் ஏஞ்சல்கள் டெவில்களாகவும், டெவில்கள் ஏஞ்சல்களாகவும் மாறி நேற்று விளையாடினர். இதில் ஏஞ்சல்களின் ஹார்ட் பேட்ஜுகளை கைப்பற்றும் முனைப்பிலேயே டெவில்கள் இருந்ததால் நேற்று பெரியளவில் சண்டைகள் எதுவும் நடைபெறாமல் கமுக்கமாக டாஸ்க் நடந்து முடிந்தது.

இதையும் படியுங்கள்... சம்பாதிச்ச மொத்தமும் போச்சு; இப்போ ஜீரோவாகிட்டோம்! பரிதாப நிலையில் மைனா நந்தினி

Tap to resize

Bigg Boss Angels vs Devil Task

ஏஞ்சல் வெர்சஸ் டெவில் டாஸ்க்கின் முடிவில் அதில் சிறப்பாக பங்கெடுத்த போட்டியாளர்களை தேர்வு செய்தனர். அதில் மஞ்சரி சிறந்த போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டு அவருக்கு அடுத்த வாரத்திற்கான நாமினேஷன் ஃப்ரீ பாஸும் கிடைத்திருக்கிறது. அதேபோல் சிறப்பாக பங்கேற்காத போட்டியாளர்களாக ஜாக்குலின் மற்றும் செளந்தர்யா தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் உப்பில்லாத சாப்பாடை சாப்பிட வைத்து தண்டனை கொடுத்துள்ளார் பிக் பாஸ்.

Bigg Boss Elimination Prediction

பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த சீசனில் இந்த வாரம் 12 பேர் நாமினேட் ஆகி இருந்தனர். இதில் முத்துக்குமரன், செளந்தர்யா, ஜாக்குலின், ராணவ் ஆகியோர் அதிக வாக்குகளை பெறு முதல் நான்கு இடங்களில் உள்ளனர். அதேபோல் கம்மியான வாக்குகளை பெற்ற போட்டியாளர்கள் பட்டியலில் ரயான், தர்ஷிகா, ஆனந்தி, சாச்சனா ஆகியோர் உள்ளனர்.

Sachana Least Vote in Unofficial Voting

இதில் சாச்சனாவுக்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இருப்பினும் அவர் எலிமினேட் ஆவாரா என்பது சந்தேகமே.. ஏனெனில் கடந்த இரண்டு வாரங்களாக சாச்சனா கடைசி இடத்தில் இருந்தாலும் அவரை காப்பாற்றிவிட்டு, மற்ற போட்டியாளர்கள் தான் எலிமினேட் செய்யப்பட்டனர். இதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில், இந்த வாரமாவது சாச்சனாவை எலிமினேட் செய்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... இது ஒன்னும் உங்க அப்பன் வீடில்ல; பிக் பாஸில் ஜாக்குலினை வறுத்தெடுத்த தர்ஷிகா!

Latest Videos

click me!