சாதி பார்த்து தான் வாய்ப்பளிக்கிறேனா? விமர்சனங்கள் குறித்து முதன்முறையாக மனம்திறந்த மாரி செல்வராஜ்

Published : Jul 05, 2023, 08:40 AM IST

மாமன்னன் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், சாதி பார்த்து தன் படங்களில் பணியாற்ற வாய்ப்பளிப்பதாக எழுந்த விமர்சனத்திற்கு பதிலளித்துள்ளார்.

PREV
14
சாதி பார்த்து தான் வாய்ப்பளிக்கிறேனா? விமர்சனங்கள் குறித்து முதன்முறையாக மனம்திறந்த மாரி செல்வராஜ்
mari selvaraj

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட இயக்குனர் என்றால் அது மாரி செல்வராஜ் தான். இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர், பரியேறும் பெருமாள் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார். சாதிய ஒடுக்குமுறை பற்றி நேர்த்தியான திரைக்கதை உடன் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

24
maamannan

இதையடுத்து தனுஷை வைத்து இவர் இயக்கிய கர்ணன் திரைப்படமும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படமாக அமைந்தது. அடுத்தடுத்து இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த மாரி செல்வராஜுக்கு அடுத்ததாக கிடைத்த வாய்ப்பு தான் மாமன்னன். இதில் ஹீரோவாக உதயநிதியும், கதையின் நாயகனாக வடிவேலுவும் நடித்திருந்தனர். சமூக நீதியையும், சமத்துவம் பற்றியும் பேசும் இப்படம் கடந்த ஜூன் 29-ந் தேதி திரைக்கு வந்து வெற்றிநடைபோட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்... சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு! 'மாமன்னன்' குழுவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

34
mari selvaraj

மாமன்னன் படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.25 கோடிக்கு மேல் வசூலித்து உதயநிதியின் கெரியரிலேயே மாபெரும் வெற்றிப்படமாக மாமன்னன் அமைந்துள்ளது. மாமன்னன் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், தன்னுடைய படங்களில் பணியாற்ற வருபவர்களுக்கு சாதி பார்த்து தான் வாய்ப்பளிப்பதாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து அவரே பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

44
mari selvaraj

அதில் அவர் கூறியதாவது : “இது ரொம்பவே வெறுப்பான கேள்வி தான். நான் 15 வருஷம் சினிமாவுல கஷ்டப்பட்டு வந்தேன். நான் இருக்கேன்  அப்படிங்குற நம்பிக்கைல சில பேர் வரதான் செய்வார்கள். அதுமாதிரி ஒன்னு ரெண்டு நடக்கத்தான் செய்யும். நான் வரும்போது எனக்கு யாருமே இல்ல. நான் கஷ்டப்பட்ட மாதிரியே எல்லாரும் கஷ்டப்படனும்னு அவசியமில்லை. எனக்கு ரஞ்சித் அண்ணேன் ஒரு ஸ்பேசை உருவாக்கினார். அவர் மட்டும் இல்லேனா இவ்வளவு வீரியமான படங்கள் செய்திருப்பனா என எனக்கு தெரியாது.

சக மனிதர்களோட உதவி இல்லாம இங்க யாருமே ஜெயிக்க முடியாது. ராம் மட்டும் இல்லயென்றால் நான் என்ன ஆகிருப்பேன். என்கூட வேலை செய்யும் எல்லாருக்கும் தெரியும், நான் அப்படி வாய்ப்பளிப்பதில்லை என்று. எல்லாரும் வேற வேற வாழ்வியல்ல இருந்து வந்தவர்கள்” எனக்கூறி தன்மீதான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்... மாமன்னன் படத்தில் நெகடிவாக இருந்தது என்ன?.. உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்த அல்டிமேட் காமடி வீடியோ!

click me!

Recommended Stories