ராமாயணம் படத்தில் சீதையாக நடிக்காததற்கு யார் காரணம்? ஸ்ரீநிதி ஷெட்டி ஓப்பன் டாக்!

Published : Apr 26, 2025, 02:31 PM ISTUpdated : Apr 26, 2025, 03:00 PM IST

Srinidhi Shetty: நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, ஹிட் படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது, ராமாயணம் படத்தில் சீதாவாக தான் நடிக்காததற்கு காரணம் யாஷ் என கூறியுள்ளார்.

PREV
15
ராமாயணம் படத்தில் சீதையாக நடிக்காததற்கு யார் காரணம்? ஸ்ரீநிதி ஷெட்டி ஓப்பன் டாக்!

நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி:

கர்நாடகாவைச் சேர்ந்தவர் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. கன்னட சினிமாவில் 2018 ஆம் ஆண்டு திரைக்கு வந்த கேஜிஎஃப் சேப்டர் 1 படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். விமர்சன ரீதியாகவும் இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது. அதுமட்டுமின்றி பெரிய பணக்கார வீட்டு பெண் ரோலில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். இந்த படத்தில் யாஷ் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டியின் கெமிஸ்டரி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
 

25
Yash and Srinidhi Shetty Chemistry:

யாஷ் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டியின் கெமிஸ்டரி:

இந்தப் படம் கொடுத்த வரவேற்புக்கு பிறகு கேஜிஎஃப் சேப்டர் 2 படத்தில் மீண்டும் இணைந்து நடித்தார். இந்தப் படமும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து, தமிழில் 'கோப்ரா' படத்தின் மூலமாக அறிமுகமானார். அதுவும் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படம் பெரியளவில் ரீச் கொடுக்கவில்லை. என்றாலும் இவருக்கான வரவேற்பு குறையவில்லை. 

3 படத்தில் ரூ.1600 கோடி வசூல்! அசர வைக்கும் தமிழ் நடிகை யார் தெரியுமா?
 

35
HIT: The Third Case Movie:

நானிக்கு ஜோடியாக ஸ்ரீநிதி:

தற்போது தெலுங்கில் HIT: The Third Case என்ற படத்தின் மூலம் நானிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படம் வரும் மே 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதே போன்று தெலுசு கதா என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதே போன்று கிச்சா 47 படத்திலும் நடிக்கிறார். இந்த நிலையில் நானி படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீநிதி ஷெட்டி பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 
 

45
Ramayanam Movie Chance

ராமாயணம் படத்தில் நடிக்காதது ஏன்?

அதாவது ராமாயணம், படத்தில் தான் நடிக்காததற்கு யாஷ் தான் காரணம் என்பது போல் கூறியுள்ளார். 'ராமாயணம்' படத்தில் சீதையாக நடிப்பதற்கு நடந்த ஆடிஷனில் ஸ்ரீநிதியும் கலந்து கொண்டாராம். இந்த ஆடிஷனில் தனது நடிப்பு தயாரிப்பாளர்களுக்கு பிடித்துவிட்டது. ஆனால், கேஜிஎஃப் படத்தில் ஹீரோவாக நடித்த யாஷ் ராமாயணம் படத்தில் இராவணனாக நடிப்பதால் இந்த படத்தில் நான் நடிக்கவில்லை. அதற்கு காரணம் அவர் ராமனாக நடித்திருந்தால் நான் சீதையாக நடிப்பதற்கு சரியாக இருக்காது. என்னுடைய ரோல் சீதை என்பதால், அவர் ராவணன் என்பதால் கெமிஸ்டரி ஒர்க் அவுட் ஆகாது. ஆதலால் தான் நான் இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

மாஸ்க் அணிந்து பிரயாக்ராஜ் வந்த கோப்ரா நடிகை – கும்பமேளாவில் புனித நீராடிய ஸ்ரீநிதி ஷெட்டி!

55
Sai Pallavi Acting Ramayanam Movie:

சீதையாக மாறிய சாய் பல்லவி:

இதன் காரணமாக இப்போது சீதையாக நடிகை சாய் பல்லவி நடித்து வருகிறார். ரன்பீர் கபூர் ராமனாக நடித்து வருகிறார். மேலும் ரவி துபே மற்றும் சன்னி தியோல் ஆகியோர் பலரும் நடித்து வருகின்றனர். நிதேஷ் திவாரி இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் பார்ட் 1 மற்றும் பார்ட் 2 என்று இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories