'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் இன்றைய 464ஆவது எபிசோடில் கோமதியின் பேச்சையும் மீறி ராஜீ டான்ஸ் ஆட சென்றுள்ளார். இதற்கெல்லாம் உடந்தையாக இருந்தது மீனா இருக்கிறார்.
'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் இன்றைய 464ஆவது எபிசோடானது அரசிக்கு அறிவுரை சொல்லும் காட்சியுடன் தொடங்குகிறது. சதீஷ் தான் அரசிக்கு ஏற்ற மாப்பிள்ளை. குமரவேல் ஒரு கேடி என்று மீனா அறிவுரை சொல்கிறார். சதீஷ் அனுப்பிய வாய்ஸ் நோட்டை அரசி திரும்ப திரும்ப கேட்கிறார். இதையடுத்து டான்ஸ் நிகழ்ச்சியின் 2ஆவது சுற்றுக்கு போக வேண்டுமே? என்ன பண்ணுவது என்று ராஜீ புலம்பிக் கொண்டிருக்கும் போது... மீனா அத்தையிடம் சொல்லாமல் சென்றுவிடு. சொன்னால் போக முடியாது என்று அவரை டான்ஸ் போட்டிக்கு அனுப்பி வைக்கிறார்.
24
Gomathy Angry
ராஜீ செயலால் கோபத்தில் கோமதி:
அந்த நேரம் பார்த்து கோயிலுக்கு போன கோமதி வரவே எல்லோரையும் தேட, மீனா தூங்குவது போன்று ஆக்ஷன் காட்டினார். அவரை தட்டி எழுப்பி ராஜீயை பற்றி கேட்க, அவரோ டான்ஸ் ஆட சென்றிருக்கிறார் என்று மீனா உண்மையை போட்டு உடைத்துள்ளார். இதையடுத்து கோபத்தோடு சென்ற கோமதி, ராஜீயை திட்டிதீர்த்தார். கையில் கம்பு வைத்துக் கொண்டு அதட்டினார். இது எதுவுமே தனக்கு கேட்காத மாதிரி நடித்த ராஜீ தனது பெயர் வந்ததும் மேடை ஏறி டான்ஸ் ஆடி அசத்தியுள்ளார். இதைப் பார்த்த கோமதி உற்சாகமாக கை தட்டி ஆரவாரம் செய்தார்.
இந்த சுற்றில் வெற்றி பெற்ற ராஜீ 3ஆவது சுற்று போட்டிக்கு தகுதி பெற்றார். இதில், 3 பாடல்களுக்கு டான்ஸ் ஆட வேண்டும். அதில், வெற்றி பெற்றால் கார் பரிசாக கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 2ஆவது பரிசு பைக், 3ஆவது பரிசு தங்க செயின். ஊர்க்காரர்கள் ராஜீ டான்ஸ் ஆடியதை பார்த்து அவரை பாராட்டினார்கள். அப்போது கோமதி, இவள் என்னுடைய மருமகள் தான் என்று பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். கொஞ்ச நேரத்துக்கு முன் அப்படி பேசுனீங்க, இப்போது இப்படி பேசுறீங்க என்று மீனா தன் பங்கிற்கு கிண்டல் செய்கிறார்.
44
Kumaravel Reached in Ambasamuthiram
அரசியை தேடி அம்பாசமுத்திரம் வந்த குமரவேல்:
மேலும், எப்படி ஜெயிச்சு முதல் பரிசான காரை ஜெயிச்சு கொடுத்துவிடு. அதை அரசிக்கு கொடுத்துவிடுவோம் என்று கோமதி ராஜீயிடம் கூறினார். இல்லை, இல்லை எனக்கு பைக் வேண்டும் என்று ராஜீ கூற, கடைசியில் காரும் வேண்டாம், பைக்கும் வேண்டாம், தங்கம் ஜெயித்துவிடு என்றார். இதற்கிடையில் சுகன்யா சொன்னதை கேட்டு அரசியை தேடி குமாரவேல் அம்பாசமுத்திரம் வந்து அரசி தங்கியிருக்கும் வீட்டை கண்டுபிடித்து அங்கு சென்றுள்ளார். ஆனால், வீடு பூட்டியிருந்தது. இதனால் வெளியில் காத்துக் கொண்டிருக்கிறார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய 464ஆவது எபிசோடு முடிவுக்கு வந்துள்ளது.