Gangers Collection: வசூல் வேட்டையை தொடங்கிய 'கேங்கர்ஸ்'! 2-ஆவது நாள் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

Published : Apr 26, 2025, 09:42 AM ISTUpdated : Apr 26, 2025, 10:46 AM IST

சுந்தர் சி மற்றும் வடிவேலு காம்போவில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரிலீஸ் ஆகி, நல்ல வரவேற்பை பெற்று வரும் 'கேங்கர்ஸ்' படத்தின் 2-ஆவது நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.    

PREV
15
Gangers Collection: வசூல் வேட்டையை தொடங்கிய 'கேங்கர்ஸ்'! 2-ஆவது நாள் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

கமெர்ஷியல் பட இயக்குனர் சுந்தர் சி:

தமிழ் சினிமாவில் தொடர்ந்து கமர்ஷியல் படங்களை இயக்கி அடுத்தடுத்த வெற்றியை கொடுத்து வருபவர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'அரண்மனை', மற்றும் 2013-ல் வெளியாக தயாராகி கிடப்பில் போடப்பட்டு... இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆன 'மதகஜ ராஜா' ஆகிய இரண்டு படங்களும், வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன.
 

25
Gangers Release

இந்த வாரம் ரிலீஸ் ஆன கேங்கர்ஸ்:

இதை தொடர்ந்து,  இந்த ஆண்டு வெளியாகி இருக்கும் மற்றொரு திரைப்படம் தான் 'கேங்கர்ஸ்'. இந்த படத்தை சுந்தர் சி-யே இயக்கி ஹீரோவாக நடித்தும் உள்ளார். வடிவேலு ஹீரோவுடன் பயணிக்க கூடிய காமெடி ரோலில் நடிக்க, கேத்ரின் தெரேசா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஏப்ரல் 24-ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆன நிலையில், ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. அதே நேரம் வடிவேலு காமெடியில் கொஞ்சம் ஓவர் பர்ஃபாமென்ஸ் செய்துள்ளார் என  சிலர் கூறி வருகிறார்கள். ஆனால் இப்படம் ஹிட் லிஸ்டில் இணைந்துள்ளதால்... சுந்தர்சி ஹார்டிக் வெற்றியை கைப்பற்றி உள்ளார்.

ரிலீஸ் ஆன முதல் நாளே வசூலில் குட் பேட் அக்லியை ஓவர்டேக் செய்த கேங்கர்ஸ்!
 

35
Gangers Cast

கேங்கர்ஸ் பட நடிகர்கள்:

கேங்கர்ஸ் திரைப்படம் தமிழகத்தில் மட்டும், சுமார் 300 திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. சுந்தர் சி - மற்றும் வடிவேலுவுடன் இணைந்து இந்த படத்தில், வாணி போஜன், முனீஸ்காந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இந்த திரைப்படம் ஹாலிவுட் வெப் தொடரான, மணி ஹெய்ஸ்ட் வெப் தொடரின் கதையை இன்பியர் செய்து எடுக்கப்பட்டுள்ளதாக, சுந்தர் சி இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூறி இருந்தார்.

45
Gangers Day 2 Collection:

கேங்கர்ஸ் படத்தின் 2 நாள் வசூல்:

ரசிகர்களுக்கு திரையரங்கில் நகைச்சுவை விருந்து வைத்திருக்கும் இந்த படம், முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.1.5 வசூலும், உலக அளவில் ரூ.2 கோடி வசூலும் செய்ததாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து இரண்டாவது நாளிலும் வசூல் சற்றும் குறையாமல், தமிழகத்தில் முதல் நாளை போலவே ரூ.1.5 கோடியும், உலக அளவில் ரூ.2 கோடி வசூலையும் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

சுந்தர் சி - வடிவேலு காம்போ காமெடியில் கலக்கியதா? சொதப்பியதா? கேங்கர்ஸ் விமர்சனம் இதோ

55
Gangers Collect 100Cr?

100 கோடி வசூல் வேட்டை செய்யுமா?

இன்று மற்றும் நாழி (சனி - ஞாயிறு) விடுமுறை நாட்கள் என்பதால்... வசூல் அதிகரிக்கும் என திரையரங்கு உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அரண்மனை படத்தை போல் இந்த படமும் ரூ.100 கோடி வசூலை எட்டுமா? என்கிற எதிர்பார்ப்பும் எகிறி உள்ளது குறிப்பிடத்தக்கது.  

Read more Photos on
click me!

Recommended Stories