காப்புரிமை மீறல்; ஏ ஆர் ரகுமான் 2 கோடி செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

Published : Apr 25, 2025, 05:00 PM ISTUpdated : Apr 26, 2025, 08:53 AM IST

மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் 'வீர ராஜ வீர' பாடல், காப்புரிமையை மீறும் விதத்தில், ஏ.ஆர்.ரகுமான் பயன்படுத்தியுள்ளதாக பாடகர் வாசிஃபுதீன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   

PREV
16
காப்புரிமை மீறல்;  ஏ ஆர் ரகுமான் 2 கோடி செலுத்த  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

தென்னிந்திய திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்:

தமிழில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய, 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக வெள்ளி திரையில் அறிமுகமானவர் ஏ ஆர் ரகுமான். தற்போது தென்னிந்திய திரை உலகின் முன்னணி இசையமைப்பாளராக உள்ளார்.  அதேபோல் அதிக சம்பளம் வாங்கும் பாடகராகவும், இசையமைப்பாளராகவும் திகழ்ந்து வருகிறார்.
 

26
Oscar Winner AR Rahman

ஆஸ்கர் விருது:

கடந்த 30 வருடங்களாக யாராலும் எட்ட முடியாத பல சாதனைகளை செய்துள்ள ஏ ஆர் ரகுமானுக்கு கிடைத்த, ஆஸ்கர் விருது இவருடைய திறமைக்கான மணி மகுடமாகவே பார்க்கப்படுகிறது. இவர் இசையில் இடம்பெறும் பாடல்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான இசையை கொண்டவை என்பதன் காரணமாகவே... இவருடைய பாடல்களுக்கு உலக அளவில் அதிகபடியான ரசிகர்கள் உள்ளனர்.

‘மனிதனாக உணராதவரை சில நேரங்களில் வெறுக்கக் கூடும்’ - ஏ.ஆர்.ரகுமான் பளீச் பேட்டி
 

36
AR Rahman

ஏ ஆர் ரகுமான் காப்புரிமை விதிமீறல்:

இந்நிலையில் ஏ ஆர் ரகுமான் காப்புரிமை விதிமீறல் சர்ச்சையில் சிக்கி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு, இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைத்திருந்தார். இதை தொடர்ந்து, பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் 2023-ல் வெளியானது.

46
Ponniyin Selvan Movie:

பொன்னியின் செல்வன்:

கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில், விக்ரம், ஐஸ்வர்யா ராய், ரவி மோகன், கார்த்தி, திரிஷா கிருஷ்ணன், பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

நாங்க இன்னும் பிரியல; ப்ளீஸ் முன்னாள் மனைவினு சொல்லாதீங்க - சாய்ரா பானு வேண்டுகோள்

56
Copyright infringement

 'வீர ராஜ வீர' பாடலின் காப்புரிமை:

இந்த படத்தை லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருந்தது. ஏ ஆர் ரகுமான் இசையில்,  இந்த பாடத்தில் இடம்பெற்ற  'வீர ராஜ வீர' என்கிற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில்,  ரூ.2 கோடி ஏ ஆர் ரகுமான் செலுத்த வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் தரப்பிலும் 'வீர ராஜ வீர' இந்த பாடல் இந்த பாடல் ‛சிவா ஸ்துதியை' தழுவி உருவானதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. எனவே காப்புரிமை சட்டப்படி ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடியை டில்லி ஐகோர்ட் பதிவாளர் அலுவலகத்தில்,  ரூ.2 லட்சம் லட்சம் மனுதாரருக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது.
 

66
Court Order to AR Rahman:

வாசிஃபுதீன் தாகூர்

அதாவது பாடகர் வாசிஃபுதீன் தாகூர், தன்னுடைய தாத்தா மற்றும் தந்தை இயற்றிய சிவா ஸ்துதி இசையை கொண்டுள்ளது என்று தொடரப்பட்ட வழக்கில் தான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த சம்பவம் தற்போது தென்னிந்திய திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Breaking : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு திடீர் நெஞ்சுவலி; அப்பல்லோ மருத்துவனையில் அனுமதி

Read more Photos on
click me!

Recommended Stories