இந்த ஆண்டு அஷ்வின் மாரிமுத்து இயக்கத்தில், வெளியான டிராகன்படத்தில் எப்படி ஆள்மாறாட்டம் செய்து ஐடி வேலைக்கு ஹீரோ பிரதீப் ரங்கநாதன் சேர்வாரே... அதே போல் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு ஒரு நபர் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிஜத்தில் நடக்கும் கதைகள் எப்படி படமாக மாறுகிறதோ அதே போல், சில சமயங்களில் படங்களில் நடக்கும் நிகழ்வுகளும் நிஜத்தில் நடக்கிறது. பண மதிப்பிழப்பு, கொரானா போன்ற பிரச்சனைகளை கூட இதற்க்கு உதாரணமாக சொல்லலாம். திரைப்படங்களில் இடம்பெற்ற பின்னரே நிஜத்திலும் இவை நடந்தது.
அந்த வகையில் தற்போது , 'டிராகன்' பட பாணியில் ஒருவர் ஆள்மாறாட்டம் செய்து ஐடி வேலையில் சேர்ந்த நிலையில், தற்போது வசமாக சிக்கி உள்ளார். அவர் மீது, 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டள்ளது.
26
Pradeep Ranganathan Movie
ரதீப் ரங்கநாதன்:
இயக்குனர் அஷ்வின் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து ரிலீஸ் ஆன திரைப்படம் 'டிராகன்'. காதல் மற்றும் காமெடி கதைக்களத்தை வைத்து மட்டும் இந்த படத்தை இயக்காமல் ஆழமான கருத்து ஒன்றையும் இயக்குனர் பதிவு செய்திருந்தார். இந்த படத்தில், பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், மற்றும் இவானா என மூன்று நடிகைகள் நடித்திருந்தனர்.
36
Fake Certificate
போலி சான்றிதழ் மூலம், ஆள் மாறாட்டம்:
அதாவது கல்லூரியில் படிக்காமல் இருந்தால் தான் கெத்து என நினைக்கும் ஹீரோவின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும் நிலையில், தன்னுடைய காதலி, ஏமாற்றிவிட்டு போய் விட்டதால் அவளின் கணவர் வாங்கும் சம்பளத்தை விட 1 ரூபாய் அதிகம் பெற வேண்டும் என நினைக்கிறான். எனவே... டிகிரி முடிக்காமலேயே போலி சான்றிதழ் மூலம், ஆள் மாறாட்டம் செய்து பெரிய ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார்.
46
Infosys Faced same problem:
உண்மையாக உழைத்து தன்னுடைய வேலையில் அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்லும் நிலையில்... அவர் வைத்திருப்பது போலி சான்றிதழ் மூலம் கல்லூரி பேராசிரியருக்கு தெரிய வரும் நிலையில்? பிரதீப் தன்னுடைய வேலையை தக்கவைத்து கொள்ள என்ன செய்கிறார் என்பதே இந்த படத்தின் கதைக்களம்.
இன்போசிஸ்:
இந்த படத்தில் காட்டப்பட்ட காட்சியை போல தற்போது இன்போசிஸ் நிறுவனத்தில் நடந்துள்ளது. வீடியோ கால் மூலம் இன்டர்வியூ எடுக்கும் போது பிரசாந்த் என்பவர் இன்டர்வியூ அட்டென்ட் செய்தார். அவருடைய படிப்பு, சரளமாக ஆங்கிலம் பேசும் தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இவருக்கு, பணியில் சேர அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் அனுப்பப்பட்டது.
56
How to Catch
சிக்கியது எப்படி?
எனவே கடந்த ஜனவரி மாதம் பணியில் சேர்ந்தார். ஆனால் நேர்காணலின் போது பேசியவரின் குரலுக்கும் வேலையில் சேர்ந்த நபரின் குரலுக்கும் வித்தியாசம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது மட்டுமின்றி சிறந்த கல்வி பின்னணி இருந்தும், அவரால் ஆங்கிலத்தில் பேசும் சில அடிப்படை விஷயங்களை கூட புரிந்து கொள்ள முடியவில்லை. அதேபோல் நேர்காணலின் போது சரளமாக ஆங்கில புலமையோடு பேசிய பிரஷாந்த் 4 வார்த்தை கோர்வையாக பேசவே திக்கி திணறியுள்ளார்.
66
Complaint Registered:
இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு:
இதனை அடுத்து அவரது பின்னணியை விசாரித்த போது அவர் ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது. அது மட்டுமின்றி இன்டர்வியூ போது எடுக்கப்பட்ட ஸ்கிரீன்ஷாட்களையும் வேலைக்கு சேர்ந்தவரின் புகைப்படத்தையும் ஒப்பிட்டு பார்த்த இன்போஸில் அதிகாரிகள் ஆள்மாறாட்டம் செய்தது உறுதி செய்து முறைகேடில் ஈடுபட்டவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. எனவே ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட பிரஷாந்த் என்கிற நபர் அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை.