அஜித்துக்கு ஜோடி இவர்தான்.. சூட்டிங் எப்போ.? அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூப்பர் அப்டேட் !!

Published : Aug 26, 2023, 04:29 PM IST

நடிகர் அஜித் குமாரின் அடுத்த திரைப்படமான விடாமுயற்சி பற்றி சமீபகாலமாக பல வதந்திகள் பரவி வருகிறது. இதுகுறித்த முக்கிய செய்தி தற்போது வெளியே கசிந்துள்ளது.

PREV
15
அஜித்துக்கு ஜோடி இவர்தான்.. சூட்டிங் எப்போ.? அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூப்பர் அப்டேட் !!

இயக்குனர் மகிழ் திருமேனி படத்தின் மூலம் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார் அஜித். விடாமுயற்சி என்ற டைட்டிலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா நிறுவனம். படம் மே மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் சூட்டிங்குக்கு செல்லவில்லை. எனவே விடா முயற்சி கிடப்பில் போடப்பட்டது என்ற வதந்தி பரவியது.

25

சமீபத்தில், படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டதால், லைகா புரொடக்ஷன்ஸ் படத்தை தயாரிப்பதில் இருந்து விலகியதாக ஒரு வதந்தி பரவியது. அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் தயாரிப்பாளர்கள் ஷூட்டிங் குறித்த பெரிய அப்டேட்டை பகிர்ந்துள்ளனர். சந்திரமுகி 2 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் லைகா புரொடக்ஷன்ஸின் சுபாஸ்கரன் முன் வந்து அதைத் தெளிவுபடுத்தினார்.

35
ajith

அப்போது பேசிய அவர், விடாமுயற்சி எங்கள் நிறுவனத்தின் மதிப்புமிக்க படம். முன் தயாரிப்பில் குழு பிஸியாக இருப்பதாகவும், விடா முயற்சியின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் அவர் கூறினார். இது அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வழக்கமான படப்பிடிப்பை தொடங்கிய பின்னரே கூடுதல் விவரங்களை எதிர்பார்க்க முடியும்.

45

ஆரம்பத்தில், இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் அஜித் குமார் நடிப்பதை தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இருப்பினும் தயாரிப்பாளர்கள் திரைக்கதை மற்றும் கதைக்களத்தில் திருப்தி அடையாததால், இயக்குனர் படத்தில் இருந்து விலகினார். பின்னர், இயக்குனர் மகிழ் திருமேனி மாற்றாக அறிவிக்கப்பட்டார். இரண்டு நாட்களுக்கு முன்பு, பல மாதங்களுக்குப் பிறகு ஐரோப்பாவிலிருந்து பைக் டூர் மூலம் திரும்பிய அஜித்குமார் சென்னை விமான நிலையத்தில் வந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

55

இப்படத்தின் நடிகர்கள் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. அனிருத் ரவிச்சந்திரன் இசையமைப்பாளராகவும், நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். கோபி பிரசன்னா டிசைன் டீமை கவனிக்கிறார். அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தவிர, நடிகர்கள் மற்றும் படக்குழு பற்றிய மற்ற விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. நாயகியாக த்ரிஷா கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. த்ரிஷா உண்மையில் விடாமுயற்சியின் ஒரு பகுதியாக இருந்தால், இது அவருக்கும் அஜித்குமாருக்கும் 5வது கூட்டணியாக இருக்கும்.

Mobile Cover : உஷார் மக்களே… போன் கேஸ்ல பணம் வச்சா உயிருக்கே ஆபத்து - நீங்க நம்பலனாலும் அதுதான் நிஜம்!

Read more Photos on
click me!

Recommended Stories