இதுல லட்சுமி யார்? பட்டு புடவையில் தெய்வீக கலையுடன் ஸ்ரீதேவி வெளியிட்ட வரலட்சுமி பூஜை போட்டோஸ்..!

First Published | Aug 26, 2023, 1:17 PM IST

நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் இந்த ஆண்டு, தன்னுடைய வீட்டில் வரலட்சுமி பூஜையின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
 

Sridevi Vijayakumar Photos

நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் 35 வயதிலும் 20 வயது ஹீரோயின் போல் அழகு தேவதையாக மிளிரும் நிலையில், இவர் தன்னுடைய வீட்டில் கொண்டாடியுள்ள வரலட்சுமி பூஜையின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Sridevi Vijayakumar Photos

பழம்பெரும் நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியின் இளைய மகள் தான், ஸ்ரீதேவி. சத்யராஜ் ஹீரோவாக நடித்த 'ரிச்சா மாமா' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதை தொடர்ந்து, அம்மா வந்தாச்சு, சுகமான சுமைகள் உள்ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

கழண்டு விழும் சட்டை... பட்டனை கழட்டி விட்டு கவர்ச்சி காட்டிய மிர்ணா! கிளாமரில் கிக் ஏற்றும் ஹாட் போட்டோஸ்!

Tap to resize

Sridevi Vijayakumar Photos

இவர் ஹீரோயினாக முதலில் அறிமுகமானது 'ஈஸ்வர்' என்கிற தெலுங்கு படத்தில் தான். இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். இதை தொடர்ந்து, தமிழில் ரிச்சர்ட் ஹீரோவாக நடித்த 'காதல் வைரஸ்' படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில்  ஹீரோயினாக மாறினார்.

Sridevi Vijayakumar Photos

பிரியமான தோழி, தித்திக்குதே, தேவதையை கண்டேன் போன்ற சில தமிழ் படங்களில் மட்டுமே ஸ்ரீதேவி நடித்தார். தெலுங்கு, கன்னடம் மொழி மொழிகளிலும் இவருக்கு பல வாய்ப்புகள் தேடி வந்த நிலையில், முன்னணி நாயகியாக இருக்கும் போதே... 2009 ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர், இவர் தமிழில் எந்த படங்களிலும் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் 2 படத்திலும், ஒரு கன்னட படத்திலும் நடித்தார்.

நடிகர் விஜய் குமார் பேத்திக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! மாப்பிள்ளை யார் தெரியுமா? வைரலாகும் போட்டோஸ்!

Sridevi Vijayakumar Photos

குழந்தை பிறந்த பின்னர் முழுமையாக திரையுலகில் இருந்து விலகிய ஸ்ரீதேவி... உடலை ஃபிட்டாக வைத்து கொள்வதோடு, அவ்வப்போது ரசிகர்களை கவரும் விதமாக, சில புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்ரீதேவி தன்னுடைய வீட்டில், நடந்த வரலட்சுமி பூஜையின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Sridevi Vijayakumar Photos

பச்சை நிற பட்டு புடவை கட்டி, நகைகைகள் அணிந்து புன்னகையோடு இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தெய்வீக கலையுடன் உள்ளதாக ரசிகர்கள் வர்ணித்து, இதில் யார் லட்சுமி என்பதில் குழப்பம் அடைவதாக கூறி வருகிறார்கள். இந்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.

குடும்பமே டார்ச்சர் செய்தது! செல்வராகவனை விவாகரத்து செய்ய இது தான் காரணம்! உண்மையை உடைத்த சோனியா அகர்வால்!

Latest Videos

click me!