உலக முத்த தினம் ஆண்டுதோறும் ஜூலை 6-ந் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழ் சினிமாவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட முத்தக்காட்சிகள் பற்றியும், அதில் நடித்த நடிகர் நடிகைகள் பற்றியும் இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
கமல்ஹாசன்
முத்தக் காட்சி என்றாலே நமக்கு சட்டென நினைவுக்கு வருபவர் கமல்ஹாசன் தான். உதட்டு முத்தம் முதல் மருத்துவ முத்தம் வரை அனைத்தும் இவருக்கு அத்துப்படி. அந்த வகையில் புன்னகை மன்னன் திரைப்படத்தில் நடிகை ரேகாவுக்கு கமல்ஹாசன் கொடுத்த லிப்லாக் முத்தம் பெரியளவில் பேசப்பட்டது.
சிம்பு
கமலுக்கு அடுத்தபடியாக அதிகப்படியான முத்தக்காட்சியில் நடித்த ஹீரோ என்றால் அது சிம்பு தான். வல்லவன் படத்தில் நயன்தாராவின் உதட்டை கடித்தபடி முத்தம் கொடுத்தது முதல் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் நடிகை திரிஷாவுக்கு அன்லிமிடெட் லிப்கிஸ் கொடுத்தது வரை இவர் நடித்த லிப்லாக் காட்சிகள் ஏராளம்.
தனுஷ்
நடிகர் தனுஷும் ஏராளமான படங்களில் லிப்லாக் காட்சிகளில் நடித்திருக்கிறார். குறிப்பாக மரியான் படத்தில் பார்வதி உடனும், வட சென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடனும், தங்கமகன் படத்தில் எமி ஜாக்சன் உடனும் நடிகர் தனுஷ் நடித்த லிப்லாக் காட்சிகள் பரபரப்பாக பேசப்பட்டன.
விஷால்
நடிகர் விஷால் முதன்முதலில் நான் சிகப்பு மனிதன் படத்தில் லிப்லாக் முத்தக்காட்சியில் நடித்தார். இப்படத்தில் லட்சுமி மேனனுடன் அவர் நடித்த முத்தக்காட்சி பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக கதகளி படத்தில் நடிகை கேத்ரின் தெரசா உடன் அவர் நடித்த லிப்லாக் முத்தக்காட்சியை சென்சாரில் கத்திரி போட்டு தூக்கிவிட்டனர்.
விஜய்
நடிகர் விஜய் ஆரம்ப காலகட்டத்தில் லிப்லாக் முத்தக் காட்சியில் நடித்துள்ளார். குறிப்பாக கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்தில் நடிகை சங்கவி உடன் இவர் நடித்த லிப்லாக் முத்தக்காட்சி பெரிதும் பேசப்பட்டது. பின்னர் ஜோதிகா, அனுஷ்கா, சமந்தா ஆகியோருடன் விஜய் முத்தக்காட்சியில் நடித்தார்.
விக்ரம், துருவ் விக்ரம்
நடிகர் விக்ரம் சாமுராய், ஐ, சாமி போன்ற படங்களில் லிப்லாக் முத்தக் காட்சியில் நடித்திருந்தார். ஆனால் அவருடைய மகன் துருவ் விக்ரம் தன்னுடைய முதல் படமான ஆதித்ய வர்மா படத்தில் எக்கச்சக்கமான லிப்லாக் முத்தக்காட்சியில் நடித்து தந்தைக்கே டஃப் கொடுத்தார்.
ஜிவி பிரகாஷ்
இசையமைப்பாளராக இருந்து தற்போது ஹீரோவாக ஜொலித்து வரும் ஜிவி பிரகாஷும் ஏராளமான லிப்லாக் காட்சிகளில் நடித்துள்ளார். திரிஷா இல்லேனா நயன்தாரா, ஜெயில், பேச்சிலர் போன்ற படங்களில் அவர் லிப்லாக் காட்சிகளில் நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தார்.
வடிவேலு
இந்த பட்டியலில் வடிவேலுவின் பெயரை பார்த்ததும் சற்று அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் வடிவேலுவும் ஒரே ஒருமுறை லிப்லாக் முத்தக் காட்சியில் நடித்திருக்கிறார். அந்த வகையில் நீ எந்தன் வானம் திரைப்படத்தில் கவர்ச்சி நடிகை ஒருவருக்கு பாடல் காட்சியில் வடிவேலு லிப்லாக் முத்தம் கொடுத்து நடித்திருந்தார்.