நடிகை சமந்தாவிற்கு சொந்தமாக இத்தனை சொகுசு கார்கள் உள்ளதா? விலையை பார்த்து ஷாக் ஆகிடாதீங்க..!!

Published : Oct 02, 2021, 03:42 PM IST

தமிழ் - தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா (Samantha) வைத்திருக்கும் சொகுசு கார்களின் (Car Collection) விவரம் தற்போது வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.  

PREV
19
நடிகை சமந்தாவிற்கு சொந்தமாக இத்தனை சொகுசு கார்கள் உள்ளதா?  விலையை பார்த்து ஷாக் ஆகிடாதீங்க..!!

பொதுவாகவே பிரபலங்கள் பயன்படுத்தும், உடைகள், கை பை, அவர்களது ஃபேவரட் பிராண்ட் உள்ளிட்டவை ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவனம் பெறுவது உண்டு. அதே போல் அவர்களது கார்கள் குறித்த கலெக்ஷன் குறித்து தெரிந்து கொள்ளவதிலும் பலருக்கு அலாதி ஆர்வம் என்றே கூறலாம்.

 

29

அந்த வகையில் தற்போது நடிகை சமந்தாவின் சொகுசு கார்களின் கலெக்ஷன் குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

 

39

ரேஞ்ச் ரோவர் (Range Rover Vogue)

குறிப்பாக சமந்தா ரூ 2 கோடி மதிப்புள்ள 'ரேஞ்ச் ரோவர்' கார் வைத்துள்ளார். பாலிவுட் நடிகர் ஹாருக்கான், கத்ரீனா கைஃப், ரன்பீர் கபூர், விராட் கோலி,அக்‌ஷய் குமார், கோலிவுட் பிரபலங்களான விஜய், தனுஷ் உள்ளிட்ட சிலர் மட்டுமே இந்த காரை பயன்படுத்துகிறார்கள்.

49

சமந்தா மற்றும் அவரது கணவர் அடிக்கடி இந்த சூப்பர் ஸ்டைலிஷான   'ரேஞ்ச் ரோவர்' காரில் பயணம் செய்வதைக் காணலாம்.

 

59

ஜாகுவார் எக்ஸ்எஃப் (Jaguar XF )

சமந்தாவுக்கு சொந்தமான மற்றொரு அழகான சொகுசு கார் ஜாகுவார். இதன் விலை சுமார் 62 லட்சம். சமந்தா தனியாக உள்ளூரில் பயணம் செய்யும் போது இந்த காரை பயன்படுத்துவது வழக்கம்.

69

ஆடி க்யூ 7  (Audi Q7 )

சமந்தா அக்கினேனி, தன்னுடைய கார் கலெக்ஷனில் முக்கியமானது, 70 லட்சம் மதிப்புள்ள ஆடி க்யூ 7 கார். பாலிவுட், கோலிவுட், டோலிவுட் பிரபலங்கள் பலரின் ஃபேவரட் கார்களில் ஒன்று இது.

 

79

போர்ஷி கேமன் ஜிடிஎஸ் (Porsche Cayman GTS)

சமந்தா ரூ .1.5 கோடி மதிப்பு கொண்டு போர்ஷி காரையும் வைத்திருக்கிறார். பார்ப்பதற்கே மனதை வசீகரிக்கும் வண்ணங்களிலும், கியூட்டாகவும் இருந்த காரை யாருக்கு பிடிக்காது சொல்லுங்கள் பார்ப்போம்.

89

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி 63 ஏஎம்ஜி (Mercedes Benz G63 AMG )

சமந்தா கார் கலக்க்ஷனில் மிகவும் சக்தி வாய்ந்த கார் இது என்றும் சொல்லலாம்.  மெர்சிடிஸ் பென்ஸ் ஜி 63 ஏஎம்ஜி கார், 5.5 லிட்டர் ட்வின்-டர்போ, மற்றும் வி 8 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த காரின் விலை 2.3 கோடி என கூறப்படுகிறது.

99

தற்போது, காத்து வாக்குல ரெண்டு காதல், சாகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து வரும் சமந்தா, விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், இதனால் அடுத்தடுத்து இவர் படங்களில் நடிப்பாரா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

click me!

Recommended Stories