மகன் ஷிவின் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடிய ரம்பா!! 45 வயசுலயும் ஹீரோயின் லுக்கில் மின்னுரங்களே!!

Published : Oct 02, 2021, 02:38 PM ISTUpdated : Oct 02, 2021, 02:45 PM IST

நடிகை ரம்பா (Rambha) தன்னுடைய மகன் ஷிவினின் (Shivin) 3 ஆவது பிறந்தநாளை, குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்களை இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
15
மகன் ஷிவின் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடிய ரம்பா!! 45 வயசுலயும் ஹீரோயின் லுக்கில் மின்னுரங்களே!!

90 களில் விஜய், அஜித், கார்த்திக் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, உச்ச கட்ட நாயகிகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ரம்பா. திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டாலும், டான்ஸ் நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்தார்.
 

 

 

25

இவர், கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திரஜித் என்கிற இலங்கையை சேர்ந்த தொழிலதிபரை, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த பின், இவர்களுக்குள் ஒரு சில கருத்து வேறுபாடு வந்தாலும், அவை அனைத்தையும் மீறி இருவரும் தற்போது ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்.

 

35

இவர்களின் அன்பின் அடையாளமாக ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. மூன்று குழந்தைகள் மற்றும் கணவருடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நடிகை ரம்பா, தன்னுடைய மகன் ஷிவின் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார்.

 

 

45

ஒட்டு மொத்த குடும்பமும் மிகவும் மகிழ்ச்சியோடு தன்னுடைய மகன் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை தற்போது ரம்பா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

 

55
rambha

தன்னுடைய 3 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் ஷிவினுக்கு, ரம்பாவின் ரசிகர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். நடிகை ரம்பா 45 வயதிலும் இளம் நாயகிகளுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில், பர்புல் நிற புடவையில் ஜொலிக்கிறார்.

 

 

click me!

Recommended Stories