இதை அடுத்து நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்த பாரதிராஜா சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் தனுசுக்கு தாத்தாவாக நடித்திருந்தார். அவரது நடிப்பு படத்தில் வெகுவான பாராட்டுகளை பெற்றிருந்தது.
மேலும் செய்திகளுக்கு...என்னது...புஷ்பா -2 வில் சாய்பல்லவியா? கதாபாத்திரம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்
இந்நிலையில் பாரதிராஜா அவர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் மதுரையில் இருந்து சென்னை திரும்புகையில் ஏர்போர்ட்டில் மயங்கி விழுந்தார். இதை அடுத்து மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்ட பாரதிராஜா ஒரு நாள் முழுவதும் மதுரையிலே தங்கி விட்டு மறுநாள் சென்னை திரும்பினார். நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவர். மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே மருத்துவமனையில் இருக்கும் பாரதிராஜாவை இளையராஜா, வைரமுத்து, ராதிகா உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் கூறி வந்தனர்.