இளையராஜாவின் குடும்பத்தை பொருத்தவரை அவருடைய தம்பி கங்கை அமரன், மூத்த மகன் கார்த்திக் ராஜா, இளைய மகன் யுவன் சங்கர் ராஜா, அவருடைய மகள் மறைந்த பாடகி பவதாரணி என்று அனைவருமே இசைத் துறையில் மிகப்பெரிய உச்சங்களை தொட்டவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் குறிப்பாக இளைய இசைஞானியாக கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் தமிழ் திரை உலகில் பயணித்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா. பிரபல நடிகர் சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ் மற்றும் நக்மா உள்ளிட்ட பலர் நடித்து கடந்த 1997ம் ஆண்டு வெளியான "அரவிந்தன்" என்கின்ற திரைப்படத்தில் நான் முதல் முறையாக இசையமைப்பாளராக களம் இறங்கினார் யுவன் சங்கர் ராஜா.
இன்றைக்கு இளையராஜாவின் பாடல்களுக்கு இணையாக யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் மெய்மறந்து பலரால் ரசிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.