கார்த்தியின் விருமன் டைட்டில் பாடலுக்கு இசையமைத்த இளையராஜா!

Published : Aug 09, 2022, 07:33 PM IST

விருமன் படத்தின் புதிய தகவலாக டைட்டில் சாங்கிற்கு இளையராஜா இசையமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
14
கார்த்தியின் விருமன் டைட்டில் பாடலுக்கு  இசையமைத்த இளையராஜா!
viruman

கார்த்தியின் விருமன் இந்த வாரத்தின் மிகப்பெரிய வெளியீடாக இருக்கப் போகிறது. ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். முத்தையா இயக்கி உள்ள இந்த படம் மூலம் பிரபல இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நாயகியாக அறிமுகமாகிறார்.

24
viruman

படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மதுரையில் நடைபெற்றது. இந்த விழாவில் அதிதி சங்கரின் பர்பாமன்ஸ் ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருந்ததோடு பிரபலங்களின் பாராட்டுகளையும் பெற்றிருந்தார் நாயகி.

மேலும் செய்திகளுக்கு...ஆறு வாரங்களில் 4 கிலோ எடையை குறைத்த ஜெனிலியா...கடின பயணத்தை வெளியிட்ட நாயகி!

34
viruman

படத்தின் புதிய தகவலாக டைட்டில் சாங்கிற்கு இளையராஜா இசையமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தந்தை மகன் இரட்டையர்களின் சிறப்பு பாடலுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தமிழ் கிராமப்புற நாடகமாக உருவாகியுள்ள இந்த படத்தின் பெரும் பகுதி மதுரையில் படமாக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...வெளியானது விக்ரம் கோப்ரா நியூ ரிலீஸ் டேட்..எப்ப வெளியீடு தெரியுமா?

தற்போது கார்த்தி மற்றும் அதிதி சங்க திரைப்பட விளம்பரத்திற்காக மலேசியா சென்றுள்ளனர். மலேசியாவில் இருந்து அவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. படத்தின் விளம்பரத்திற்காக முன்னணி நட்சத்திரங்கள் பல்வேறு இடங்களில் ரசிகர்களை சந்திக்க உள்ளனர்.

44
viruman

முத்தையா இயக்கிய விருமன் தனது கிராமத்தில் நலனுக்காக போராடும் நாயகனை மையமாகக் கொண்டுள்ளது. இதில் பிரகாஷ்ராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சூரி, பிரகாஷ்ராஜ், ஆர் கே சுரேஷ் உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு...பாரதியிடம் உண்மையை சொன்ன லட்சுமி... இன்றைய எபிசோட் இதோ !

உலகம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரம்மாண்ட வெளியிட்டிற்கு விருமன் காத்திருக்கிறது. முன்னதாக  கார்த்திகை கொம்பன் படத்தை முத்தையா இயக்கியிருந்தார். தற்போது இரண்டாவது முறையாக இந்த கூட்டணி அமைந்துள்ளது. இந்த முறையும்  பழைய வெற்றி கிடைக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories