Published : Aug 09, 2022, 06:04 PM ISTUpdated : Aug 09, 2022, 06:08 PM IST
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள பான் இந்தியா படமான 'லிகர்' திரைப்படத்தின் புரமோஷனின் ரம்யா கிருஷ்ணன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
தெலுங்கு திரைப்படங்கள் மூலம் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள 'லிகர்' திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் சூடு பிடித்துள்ளது.
29
தர்மா புரொடக்ஷன்ஸ் மற்றும் பூரி கனக்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் விஜய் தேவாரகொண்டா குத்து சண்டை வீரராக நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார்.
விஜய் தேவரைகோண்டாவின் அம்மாவாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் அமெரிக்கா குத்துசண்டை வீரர் மைக் டைசன் நடித்துள்ளார். இது இந்திய சினிமாவில் அவரது முதல் திருப்பிடம் ஆகும்.
49
தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்து 'பான்' இந்தியா படமாக படக்குழு இப்படத்தை வெளியிட உள்ளது. இந்த படத்திற்காக விஜய் தேவரகொண்டா தன்னுடைய உடல் எடையை கூட்டியும், குறித்தும் பல்வேறு வேறுபாடு காட்டி நடித்துள்ளார்.
அவரது திரையுலக பயணத்தில் ஏற்கனவே பல வெற்றி படங்கள் வெளியாகி இருந்தாலும், இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என நம்புகிறார்.
69
அதே போல், பாகுபலி படத்திற்கு பின்னர் மிகவும் வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன். படத்தின் ட்ரைலரிலேயே சில காட்சிகளில் தன்னுடைய மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த புரோமோஷனின் நடிகை ரம்யா கிருஷ்ணன் சல்லடை போன்ற சேலையில் வந்து ரசிகர்களை வசீகரித்தது மட்டும் இன்றி, சேலையை காற்றில் பறக்க விட்டு போஸ் கொடுத்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.