மூகாம்பிகை கோயிலுக்கு வைர நகைகளை வாரி வழங்கிய இளையராஜா... அதன் மதிப்பு இத்தனை கோடியா?

Published : Sep 11, 2025, 10:36 AM IST

Ilaiyaraaja Temple Visit  : கொல்லூர் மூகாம்பிகா தேவி கோவிலுக்கு சென்ற இளையராஜா, பல கோடி மதிப்புள்ள வைர நகைகளை காணிக்கையாக வழங்கி சாமி தரிசனம் செய்திருக்கிறார்.

PREV
14
Ilaiyaraaja Visit Mookambika Temple

இசை உலகின் ஜாம்பவான், இசை மேதை இளையராஜா, கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் மீதான தனது பக்தியை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். தனது இஷ்ட தெய்வமான மூகாம்பிகைக்குக் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வைரக் கிரீடம் மற்றும் நகைகளை காணிக்கையாக செலுத்தியுள்ளார். கொல்லூர் மூகாம்பிகையின் தீவிர பக்தரான இளையராஜா, ஏற்கனவே பலமுறை இந்த கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்திருக்கிறார்.

24
இளையராஜா காணிக்கையாக வழங்கிய வைர நகைகள்

கொல்லூர் மூகாம்பிகா தேவிக்கும் வீரபத்ர சுவாமிக்கும் எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள வைர கிரீடம், வைர மாலை மற்றும் தங்க வாள் காணிக்கையாக செலுத்தினார் இளையராஜா. புதன்கிழமை காலை கொல்லூருக்கு வந்த இளையராஜா கோயிலுக்கு சென்று வழிபட்ட பின்னர், சுப்பிரமணியரின் முன்னிலையில் நகைகளை காணிக்கையாக செலுத்தினார். அவரது மகனும் இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜாவும் இளையராஜாவுடன் இருந்தார்.

34
நெகிழ்ந்த இளையராஜா

நகைகளைச் சமர்ப்பிக்கும் முன், கோயில் நிர்வாகம் மற்றும் அர்ச்சகர்களுடன் இளையராஜா ஊர்வலத்தில் கலந்துகொண்டார். அப்போது, பக்திப் பரவசத்தில் தன் வாழ்வில் அன்னையின் அருளால் நிகழ்ந்த அற்புதங்களை நினைவுகூர்ந்து நெகிழ்ந்து போனார். மூகாம்பிகை அம்மனால் தன் வாழ்வில் அசாதாரண முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

44
கோவில் நிர்வாகம் பாராட்டு

இந்த மகத்தான நன்கொடைகளை வழங்கிய இளையராஜாவுக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. நாட்டின் பிரபல இசையமைப்பாளரிடமிருந்து கோயிலுக்கு இவ்வளவு பெரிய நன்கொடை கிடைத்தது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது வெறும் நகை சமர்ப்பணம் மட்டுமல்ல, ஒரு மகத்தான கலைஞர் தனது இஷ்ட தெய்வத்தின் மீது கொண்டுள்ள அளவற்ற நம்பிக்கை மற்றும் பக்திக்குச் சான்றாகும்.

கடந்த ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் கருவறைக்கு முன்னால் உள்ள அர்த்த மண்டபத்தில் இளையராஜா நுழைய முயன்றபோது அவரை கோயில் நிர்வாகம் தடுத்தது பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories