அனுஷ்காவுக்கு அடுத்த தோல்வி... ஒரே வாரத்தில் வசூலில் வாஷ் அவுட் ஆன காட்டி..!

Published : Sep 11, 2025, 08:44 AM IST

Anushka Shetty Ghaati Movie : கிருஷ் ஜாகர்லமூடி இயக்கத்தில் அனுஷ்கா ஷெட்டி கதையின் நாயகியாக நடித்த காட்டி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Ghaati Box Office

தென்னிந்திய திரையுலகில் பிசியான நாயகியாக வலம் வந்தவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் கதையின் நாயகியாக நடித்த அருந்ததி படம் தான் Female Centric படங்கள் அதிகளவில் உருவாவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. அப்படத்தின் அதிரிபுதிரியான வெற்றிக்கு பின்னர் தான் பிற நாயகிகளும் துணிச்சலாக அதுபோன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்தார்கள். இதையடுத்து ராஜமெளலி இயக்கிய பாகுபலி படம் அனுஷ்காவை பான் இந்தியா ஹீரோயினாக உயர்த்தியது. ஆனால் அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அனுஷ்காவின் கெரியர் அதளபாதாளத்துக்கு சென்றுவிட்டது.

24
அனுஷ்காவின் காட்டி

அதற்கு காரணம் அவர் நடித்த சைஸ் ஜீரோ படம் தான். அப்படத்திற்காக உடல் எடையை அதிகரித்த அனுஷ்கா, அதன் பின் மீண்டும் உடல் எடையை குறைக்க முடியாமல் போனது. இதனால் அவருக்கு பட வாய்ப்புகளும் குறையத் தொடங்கின. இதனால் அவ்வப்போது ஒன்றிரண்டு படங்களில் நடித்து வருகிறார். அந்த வாகையில் அவர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடித்த படம் தான் காட்டி. கிருஷ் ஜாகர்லமூடி இயக்கத்தில் உருவான இப்படத்தில் அனுஷ்கா ஷெட்டிக்கு ஜோடியாக விக்ரம் பிரபு நடித்திருந்தார். இப்படம் கடந்த செப்டம்பர் 5-ந் தேதி உலகளவில் ரிலீஸ் ஆனது.

34
காட்டி படத்தின் வசூல்

காட்டி திரைப்படம் சுமார் 50 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்தது. இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே நெகடிவ் விமர்சனங்களை பெற்றதால், வசூலிலும் செம்ம அடி வாங்கியது. முதல் நாள் இந்திய அளவில் 2 கோடி வசூலித்த இப்படம், இரண்டாம் நாள் 1.74 கோடி, மூன்றாம் நாள் 1.15 கோடி, நான்காம் நாள் 65 லட்சம், ஐந்தாம் நாள் 58 லட்சம், ஆறாம் நாள் 27 லட்சம் என தொடர்ந்து சரிவை சந்தித்த வண்ணம் உள்ளது. இதனால் இப்படம் ஒரே வாரத்தில் தியேட்டர்களில் இருந்து வாஷ் அவுட் ஆக உள்ளது. அனுஷ்காவின் கெரியரில் மற்றுமொரு தோல்வி படமாக காட்டி அமைந்துள்ளது.

44
மதராஸி vs காட்டி வசூல்

காட்டி திரைப்படம் இதுவரை இந்தியாவில் ரூ.6.39 கோடி மட்டுமே வசூலித்து இருக்கிறது. இப்படம் 10 கோடியை நெருங்குவதே கடினம் என கூறப்படுகிறது. இப்படத்திற்கு போட்டியாக செப்டம்பர் 5-ந் தேதி சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி திரைப்படம் ரிலீஸ் ஆனது. அப்படம் ரிலீஸ் ஆன முதல் நாள் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.12 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து இருந்தது. ஆனால் அனுஷ்காவின் காட்டி திரைப்படத்தின் லைஃப் டைம் வசூல் கூட அந்த அளவு வராதாம். இதன்மூலம் காட்டி படம் படுதோல்வியை சந்தித்து இருக்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories