நடிகை வனிதா விஜயகுமார், தான் இளையராஜா வீட்டு மருமகளா போக வேண்டியவள் என கூறியது விவாதப் பொருளாக மாறிய நிலையில், அதுபற்றிய உண்மையை பயில்வான் ரங்கநாதன் போட்டுடைத்துள்ளார்.
நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி, ஹீரோயினாக நடித்துள்ள மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படத்தில் மைக்கெல் மதன காமராஜன் படத்திற்காக இளையராஜா இசையமைத்த சிவராத்திரி என்கிற சூப்பர் ஹிட் பாடலை பயன்படுத்தி இருந்தார் வனிதா. இப்பாடலுக்காக தான் முறையே அனுமதி வாங்கியதாகவும் வனிதா கூறி இருந்தார். ஆனால் படம் ரிலீஸ் ஆன பின்னர், தன்னிடம் அனுமதி வாங்காமல் தன்னுடைய பாடலை பயன்படுத்தி இருப்பதாக கூறி, மிஸஸ் அண்ட் மிஸ்டர் படக்குழு மீது இசைஞானி இளையராஜா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த வனிதா, இளையராஜா பற்றி புது குண்டை தூக்கிப் போட்டார்.
24
இளையராஜா வீட்டு மருமகளா வனிதா?
இளையராஜா வீட்டிற்கு தான் மருமகளாக போக வேண்டியவள் என்றும் அந்த வீட்டில் தான் நகையை வைத்து பூஜையெல்லாம் செய்திருக்கிறேன் எனவும் வனிதா கூறியதை கேட்டு பலரும் ஷாக் ஆனார். இளையராஜா வீட்டு மருமகளாக செல்ல வேண்டியவர் என்றால் கார்த்திக் ராஜாவை வனிதா காதலித்தாரா என்றெல்லாம் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினர். பின்னர் இதுபற்றி விளக்கம் அளித்த வனிதா, கார்த்திக் ராஜா தன்னுடைய நண்பர் என்றும் அவரை இந்த பிரச்சனையில் இழுக்காதீர்கள் எனவும் கேட்டுக் கொண்டார். அப்படியென்றால் இளையராஜா வீட்டு மருமகளாக செல்ல வேண்டியவர் என வனிதா எதற்காக சொன்னார் என்கிற கேள்வி எழத் தொடங்கியது.
34
வனிதா பற்றி பயில்வான் ரங்கநாதன் சொன்னதென்ன?
இந்த நிலையில், பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் இந்த விவகாரம் குறித்து யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசி இருக்கிறார். அதன்படி வனிதா கூறுவது அனைத்தும் பொய் என கூறி உள்ள அவர், இளையராஜா குடும்பத்தில் யாரும் அப்படிப்பட்டவர்கள் இல்லை. குறிப்பாக கார்த்திக் ராஜா மிகவும் சாந்தமானவர். யாரிடமும் அதிகம் பேச மாட்டார். அப்பாவின் நிழலிலேயே வாழ்ந்து வருபவர். போகிற போக்கில் அவர் மீது சேற்றை வாரி வீசி இருக்கிறார் வனிதா. அவருடைய சொந்த மகனுக்கே அவரை பிடிக்காது. அதனால் தான் அந்தப் பையன் அப்பாவுடன் இருக்கிறார். அப்படியென்றால் வனிதாவை பற்றி புரிந்துகொள்ளுங்கள் என பயில்வான் கூறி இருக்கிறார்.
வனிதா இயக்கிய மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன ஒரே வாரத்தில் வாஷ் அவுட் ஆனதால், அப்படத்தை இந்த வாரம் யூடியூப்பில் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார் வனிதா. காசு கட்டி பார்க்கும் வகையில் அப்படத்தை தன்னுடைய யூடியூப் பக்கத்தில் ரிலீஸ் செய்வதாகவும், அதற்காக 86 ரூபாய் விலை நிர்ணயம் செய்துள்ளதாகவும் வனிதா அறிவித்திருந்தார். இந்த மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தை வனிதாவின் மகள் ஜோவிகா தான் தயாரித்து இருந்தார். இதில் வனிதாவுக்கு ஜோடியாக அவரின் முன்னாள் காதலனான ராபர்ட் நடித்திருக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.