'பாண்டியன் ஸ்டோர்' தொடரில் இருந்து விலகுகிறாரா காவியா? அவருக்கு பதில் நடிக்க இந்த விஜய் டிவி பிரபலமா..!

Published : Oct 21, 2021, 12:14 PM IST

விஜய் டிவியில் (Vijay TV) ஒளிபரப்பாகி வரும், 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் (Pandian Store Serial) இருந்து, தற்போது முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா அறிவுமணி (Kaavya Arivumani) விலக வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், இவருக்கு பதில் நடிக்க உள்ள நடிகை இவர் தான் என்று, ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.  

PREV
111
'பாண்டியன் ஸ்டோர்' தொடரில் இருந்து விலகுகிறாரா காவியா? அவருக்கு பதில் நடிக்க இந்த விஜய் டிவி பிரபலமா..!

விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பி வரும் அனைத்து சீரியல்களுக்குமே ரசிகர்களின் மத்தியில் நல்ல இடத்தை பிடித்து ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலுக்கு தனி இடம் உண்டு.

 

211

தெலுங்கில் 'வடிநம்மா' என்ற பெயரிலும், கன்னடத்தில் 'வரலக்‌ஷ்மி ஸ்டோர்ஸ்' எனவும் இந்தியாவில் மொத்தம் 8 மொழிகளிலும் இலங்கையிலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் ஒளிபரப்பாகி வருவது அந்த சீரியல் மீதான ரசிகர்களின் வரவேற்புக்கு சிறந்த உதாரணம்.

 

311

இந்த சீரியலில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த ஜோடியாக முல்லை - கதிர் ஜோடி இருந்து வருகிறது. முதலில் முல்லையாக விஜே சித்ராவும், கதிராக குமரனும் நடித்து வந்தனர்.

 

411

சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் விஜே சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்ததால், இவரது கதாபாத்திரத்தில் 'பாரதி கண்ணம்மா' சீரியலில் நடித்து வந்த காவ்யா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

 

511

ஆரம்பத்தில் இவரது நடிப்பு சில விமர்சனங்களை பெற்றாலும், போக போக இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாலும் உள்ளது.

 

611

இந்நிலையில் திடீர் என, 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் இருந்து காவியா விலக வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியானது.

 

711

லிப்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து, பிக்பாஸ் கவின் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நடிக்க உள்ள திரைப்படம் 'ஊர் குருவி'.

 

811

இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக காவியா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. எனவே 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் இதுவரை இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

 

911

ஆனால் இந்த தகவல் தீயாக பரவி வரும் நிலையில், தற்போது இவர் விலகினால் இவருக்கு பதில் யார் நடிக்க உள்ளார் என்கிற தகவல் ஒன்றும் உலா வர துவங்கியள்ளது.

 

1011
dharsha gupta

ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூர பூவே சீரியலில் வில்லியாகவும், பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமாய், சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'ருத்ர தாண்டவம்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான தர்ஷா குப்தா நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

1111

இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது குறித்து இது வரை எந்த ஒரு தகவலும் வெளியாகாத நிலையில்... விரைவிலேயே காவியா இந்த தகவலுக்கு முற்று புள்ளி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories