மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில், போதை மருந்து பார்ட்டி கொண்டாடியதாக, அக்டோபர் 3 ஆம் தேதி போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஷாருகான் மகன் ஆர்யன் கான் (Aryan Khan) தீவிர விசாரணைக்கு பின்னர் அக்டோபர் 8 ஆம் தேதி மும்பை ஆதார் சாலை சிறையில் அடைக்கப்பட்டார்.
Shah Rukh Khan
கோவிட் -19 தொற்று காரணமாக, சிறை கைதிகளை பார்க்க தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில். இந்த வார தொடக்கத்தில் கட்டுப்பாடுகள் முடிவடைந்ததாக கூறப்படுகிறது. எனவே இன்று தன்னுடைய மகனை ஷாருக்கான் சந்தித்து பேசியுள்ளார்.
Shah Rukh Khan
இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, ஷாருக்கானின் சந்திப்பு 16-188 நிமிடங்கள் பார்வையாளர் பகுதியில் நடந்துள்ளது. இருவருக்கும் இடையே ஒரு கண்ணாடி பகிர்வு இருந்துள்ளது. போலீசார் அனுமதி கொடுத்த நேரத்திற்குள் தன்னுடைய மகனை சந்தித்து பேசியுள்ளார் ஷாருகான்.
Shah Rukh Khan
நேற்று ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் ஜாமீன் மீதான மனு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் (என்சிபி) ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. எனவே ஆர்யனுக்கு ஜாமீன் கோரி ஷாருகான் குடும்பத்தினர் அடுத்ததாக உயர் நீதிமன்றத்தை அணுகுவார்கள் என கூறப்படுகிறது.
ஷாருக்கின் மகன் ஆர்யன் மீது NDPS சட்டத்தின் 8 (c), 20 (b), 27, 28, 29 மற்றும் 35 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.