நான் தங்கம் கடத்தவில்லை; அந்தர் பல்டி அடித்த நடிகை ரன்யா ராவ்!

Published : Mar 15, 2025, 01:53 PM ISTUpdated : Mar 15, 2025, 01:59 PM IST

தங்க கடத்தலில் நான் ஈடுபடவில்லை என்றும் யாரையோ பாதுகாக்க தான் தன் மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் சிறை அதிகாரிகளுக்கு நடிகை ரன்யா ராவ் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

PREV
15
நான் தங்கம் கடத்தவில்லை; அந்தர் பல்டி அடித்த நடிகை ரன்யா ராவ்!

தங்கம் கடத்தல் வழக்கில் தன் மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வேறு யாரையோ பாதுகாக்க என்னை குற்றவாளியாக கருதுகிறார்கள் என்று நடிகை ரன்யா ராவ் சிறை அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்கம் கடத்திய வழக்கில் டிஆர்ஐ அதிகாரிகளால் நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டு பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக, அடையாளம் தெரியாத ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் துபாயிலிருந்து தங்கத்தை கொண்டு வந்ததாக அவர் டிஆர்ஐ விசாரணையின் போது கூறியதாகவும், ஆனால் இப்போது அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகக் கூறி பதிலளித்துள்ளதாகவும் தெரிகிறது.
 

25
குற்றச்சாட்டை மறுக்கும் ரன்யா ராவ்

ரன்யா ராவ் எழுதிய கடிதத்தை சிறைத்துறை அதிகாரிகள் டிஆர்ஐ விசாரணைக்கு அனுப்பியுள்ளனர். ஆனாலும் கூட அந்த கடிதத்தை சிறைத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. "நான் ரியல் எஸ்டேட் வேலைக்காக துபாய் சென்றேன். மார்ச் 3 ஆம் தேதி நான் அங்கிருந்து திரும்பியபோது, தங்கம் எதுவும் கொண்டு வரவில்லை. ஆனால் யாரோ ஒருவரைப் பாதுகாப்பதற்காக, சிலர் என் மீது தங்கக் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர். இந்த விவகாரத்தை விசாரித்து நீதி வழங்குமாறு சிறை அதிகாரிகளிடம் ரன்யா கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.

Actress Ranya Rao: யூடியூப் பார்த்து தங்கம் கடத்தலில் ஈடுபட்டேன் - பகீர் கிளப்பிய ரன்யா ராவ்!
 

35
ரன்யா 2024 ஆம் ஆண்டில் 27 முறை துபாய்க்கு சென்றுள்ளார்:

சட்டவிரோதமாக தங்கம் கொண்டு வந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்க சிறப்பு பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் ரன்யா ராவின் ஜாமீன் மனுவை முழுமையாக நிராகரிக்க நீதிபதி விஸ்வநாத் சி. கவுடர் உத்தரவிட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட ரன்யா 2024 ஆம் ஆண்டில் 27 முறை துபாய்க்கு சென்றுள்ளார். அவளிடம் துபாய் குடியிருப்பு அடையாள அட்டையும் உள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் புலனாய்வாளர்களிடம் உள்ளன. மனுதாரர் ஈடுபட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத தங்கக் கடத்தலில் இருந்து ரூ.4.83 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. வரி மோசடி குற்றச்சாட்டு உள்ளது. 
 

45
ரன்யா ராவிற்கு சர்வதேச அளவில் தொடர்பு

மேலும், ரன்யா ராவிற்கு சர்வதேச அளவில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் கடுமையாகவே உள்ளது. அதோடு, விசாரணை இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. அப்படியிருக்கும் சுழுலில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால், சாட்சிகளை குழப்பி வழக்கைத் திசை திருப்ப வாய்ப்பு உள்ளது. எனவே, ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார். ஜாமீன் மனு விசாரணையின் போது, ரன்யாவின் வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு குற்றவியல் வழக்கில் கைது செய்யப்பட்டபோது, விசாரணை அதிகாரிகள் கைதுக்கான காரணத்தை கைது குறிப்பில் குறிப்பிடவில்லை என்று கூறினார்.

Gold Smuggling Case: நடிகை ரன்யா ராவ் ஜாமீன் மனு தள்ளுபடி!
 

55
ரன்யா ராவ் தரப்பில் முறையிடப்பட்ட வாதம்

கைது செய்யப்பட்ட உடனேயே அவர் சுங்கத் துறை அதிகாரி முன்பே அல்லது ஒரு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்படவில்லை. ரன்யா கைது செய்யப்பட்டபோது சுங்கச் சட்டத்தின் விதிகள் பின்பற்றப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்ட 3 பேரில், ரன்யா மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். ரன்யாவின் உடலில் தங்கம், காலணிகள் மற்றும் ஒரு பாக்கெட் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும், உலோகக் கண்டுபிடிப்பான் எந்த தங்கத்தையும் கண்டறியவில்லை. கைது செயல்பாட்டில் டிஆர்ஐ அதிகாரிகள் பல சட்ட குறைபாடுகளைச் செய்தனர். மேலும், மனுதாரர் ஒரு பெண் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories