"பாடகி தீ-யிடம் மன்னிப்பு கேட்கிறேன்" ‘முத்த மழை’ பாடல் குறித்து சின்மயி உருக்கம்

Published : Jun 02, 2025, 04:18 PM ISTUpdated : Jun 02, 2025, 05:08 PM IST

“முத்த மழை..” பாடல் குறித்து தன்னையும் பாடகி தீ-யையும் ஒப்பிடுவதற்கு சின்மயி மன்னிப்புக் கோரியுள்ளார்.

PREV
16
“முத்த மழை..” பாடல் சர்ச்சை

‘தக் லைஃப்’ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள “முத்த மழை..” பாடலை பாடகி தீ பாடியுள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இதே பாடலை சின்மயி பாடி இருந்தார். எனவே இருவரின் குரலையும் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் கருத்துக்கள் வேகமாக பரவி வரும் நிலையில் சின்மயி இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

26
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ‘தக் லைஃப்’ திரைப்படம்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர் உள்ளிட்ட மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் தான் ‘தக் லைஃப்’. இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

36
‘தக் லைஃப்’ இசை வெளியீட்டு விழாவில் பாடிய சின்மயி

படம் வருகிற ஜூன் 5-ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் டிரெய்லருக்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்தில் இடம்பெற்றுள்ள “முத்த மழை..” என்கிற பாடலை மேடையில் சின்மயி பாடினார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகத் தொடங்கியது.

46
தீ, சின்மயியை ஒப்பிடும் ரசிகர்கள்

தமிழில் இந்தப் பாடலை தீ பாடியுள்ள நிலையில் தெலுங்கு மற்றும் ஹிந்தி வெர்ஷனில் சின்மயி பாடியுள்ளார். இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் தீ-யின் “முத்த மழை..” பாடலை விட சின்மயி பாடிய வெர்ஷன் அழகாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது என இருவரையும் ஒப்பிட்டு கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். ஆனால் இது தவறான ஒப்பீடு என்று சின்மயி விளக்கியுள்ளார்.

56
தீ-யிடம் மன்னிப்புக் கோரிய சின்மயி

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சின்மயி, தன்னையும் தீ-யையும் ஒப்பிட்டு பேசுவது வருத்தம் அளிப்பதாக கூறினார். நான் பாடிய பாடலுக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என நினைக்கவில்லை. தீ-யால் அன்று இசை வெளியீட்டு விழாவிற்கு வர முடியவில்லை. அதனால் அந்த பாடலை நான் மேடையில் பாடினேன். என்னுடைய வேலையை நான் செய்தேன். பாடகி தீ-க்கு தனிப்பட்ட குரல் வளம் இருக்கிறது. அவருடைய முகபாவனை யாராலும் கொடுக்க முடியாது என்றார்.

66
15 வருடத்தில் தீ மிகப்பெரிய பாடகியாக வருவார் - சின்மயி

மேலும் பேசிய அவர், தன்னுடைய வெர்ஷனும், அவர் பாடிய வெர்ஷனும் ஒரு மல்யுத்த போட்டி நடப்பது போல சமூக வலைதளங்களில் சென்று கொண்டிருக்கிறது. ஒரு கலைஞனாக அவர் பாடிய பாடலை நான் மதிக்கிறேன். என்னுடைய 20 வயதில் இப்படி ஒரு பாடலை என்னால் பாடியிருக்க முடியாது. குரல் நுணுக்கங்களை அடைய நீண்ட கால அனுபவங்களும் எனக்கு ஒரு காரணமாக இருந்தன. இது எனக்கும் தீ-க்குமான போட்டி அல்ல. அவர் வளர்ந்து வரும் இளம் பாடகி. இன்னும் 15 வருடங்கள் கழித்து அவர் 100 சின்மயி, 100 ஸ்ரேயா கோஷலை விழுங்கும் திறன் பெற்றிருப்பார். அவருக்கென்று ஒரு தனி இடம் இருக்கும். எங்கள் இருவரையும் ஒப்பீடு செய்வது அவசியமற்றதாக நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories