1990களில் வெளிவந்த தமிழ் படத்திற்காக இளையராஜா இசையமைத்த பாடல் ரஜினிக்கு திருப்தி அளிக்கவில்லை. ஆனால், இளையராஜா சொன்னபடியே அந்தப் பாடல் சூப்பர் ஹிட்டானது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - இளையராஜா காம்போ என்றால் அப்படம் நிச்சயம் வெற்றி என்றே சொல்லலாம். ஆனால், இவர்கள் கூட்டணியில் வந்த ஒரு எவர்கிரீன் பாடலை ரஜினி வேண்டாம் என்று நிராகரித்திருக்கிறார். பலமுறை அப்பாடலைக் கேட்டும் ரஜினிக்கு திருப்தி அளிக்கவில்லை. ஆனால் இளையராஜா சொன்ன ஒற்றை வார்த்தையில் ரஜினி அப்பாடலை படத்தில் வைக்க சம்மதித்தார். ரஜினியின் கணக்கு தப்புக்கணக்காகி போனதால், அப்பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. அது என்ன பாடல் என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
24
ரஜினியை சமாதானப்படுத்திய இளையராஜா
1992ல் 'மன்னன்' பட வேலைகள் நடந்தன. அப்போது இளையராஜா 'அம்மா என்றழைக்காத' பாடலின் ட்யூனை போட்டுக் காட்டினார். அந்த நேரத்தில் ரஜினி ஒரு மாஸ் ஹீரோவாக, ஆக்ஷன் படங்களில் பிஸியாக இருந்தார். பாடலைக் கேட்ட ரஜினி, 'ராஜா, இந்தப் பாடல் மெதுவாக உள்ளது, என் இமேஜுக்கு செட் ஆகுமா? ரசிகர்கள் ஏற்பார்களா? வேறு பாடல் செய்யலாமா?' எனக் கேட்டார். ரஜினி தயங்குவதைக் கண்ட இளையராஜா, 'இதுவரை நீங்கள் ஒரு கமர்ஷியல் ஹீரோ. இந்தப் பாடல் உங்களை ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் கொண்டு செல்லும். இது உங்களை வேறு உயரத்திற்குக் கொண்டு செல்லும்' என்றார்.
34
அடிபொலி ஹிட் அடித்த பாடல்
இளையராஜாவின் அசைக்க முடியாத நம்பிக்கையை ரஜினி ஏற்றுக்கொண்டார். 'மன்னன்' வெளியானதும், இளையராஜா சொன்னது உண்மையானது. வாலியின் வரிகள், ஜேசுதாஸின் குரல், ரஜினியின் நடிப்பு அப்பாடலை காவியமாக்கியது. குடும்ப ரசிகர்கள் ரஜினியை தங்கள் வீட்டுப் பிள்ளையாக பார்க்க, அவரது 'பேமிலி ஆடியன்ஸ்' பல மடங்கு அதிகரித்தது. அன்று இளையராஜா சொன்னது வெறும் ஆறுதல் வார்த்தை அல்ல, அது ஒரு மகத்தான கலைஞனின் பார்வை.
ஒருவேளை ரஜினி பிடிவாதமாக அந்தப் பாடலை நிராகரித்திருந்தால், தமிழ் சினிமாவின் சிறந்த 'அம்மா' பாடல்களில் ஒன்றை நாம் இழந்திருப்போம். இன்றும் அன்னையர் தினம் என்றால் முதலில் ஒலிப்பது இந்தப் பாடல்தான். இப்பாடல் வரிகள் திருச்சி அருகே உள்ள ஒரு ஐயப்பன் கோவில் கல்வெட்டில் செதுக்கப்பட்டிருப்பது அதற்கு கிடைத்த மற்றுமொரு பெருமையாக கருதப்படுகிறது. இன்று அம்மாவைப் பற்றி எத்தனைப் பாடல்கள் வந்தாலும், அதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டது ரஜினியின் மன்னன் பட பாடல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.