ஒரே கார்.. ஒரே நிற உடை; எதைப் பற்றியும் கவலை இல்ல; மேரேஜ் ரிஷப்சனுக்கு ஜோடியாக வந்த விஜய் அண்ட் த்ரிஷா!

Published : Mar 05, 2026, 10:38 PM ISTUpdated : Mar 05, 2026, 10:42 PM IST

Vijay and Trisha Together in Wedding Reception: விஜய்க்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக கூறி சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்த நிலையில் விஜய் த்ரிஷா இருவரும் ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

PREV
16
Vijay and Trisha Viral Wedding Video 2026

விஜய் மற்றும் சங்கீதா இடையிலான விவாகரத்து சமூக வலைதளங்களில் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், அதிகம் சம்பளம் பெறும் ஒரு நடிகராக இருக்கும் நிலையில், அவருக்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக கூறி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த டிசம்பர் மாதமே விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்த நிலையில் கடந்த வாரம் தான் இந்த விவாகரத்து வழக்கு வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

26
Vijay Trisha Same Car Viral Photo

மேலும், சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனுவில் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும், இதனை தட்டி கேட்டதால் தன்னை வீட்டில் வைத்து கொடுமைப்படுத்துவதாகவும் பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். ஆனால், சங்கீதா அந்த நடிகையின் பெயரை மட்டும் குறிப்பிடவில்லை. சங்கீதாவின் குற்றசாட்டுக்கு விஜய் எந்தவிதமான மறுப்பும் தெரிவிக்கவில்லை. சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கு வரும் ஏப்ரல் 20ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

36
Thalapathy Vijay and Trisha Matching Costume Look

எனினும், சமூக வலைதளங்களில் த்ரிஷா தான் அந்த நடிகை என்று தகவல் வெளியாகி வரும் நிலையில் அது உண்மை என்பதை காட்டும் வகையில் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ஜோடியாக ஒரே காரில் ஒரே கலரில் உடையணிந்து திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர்.

46
Leo Movie Duo Vijay Trisha Latest News

வதந்திகளுக்கு மேலும் ஹைப் அளிக்கும் வகையில் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஒன்றாக வலம் வருகின்றனர். ஏஜிஎஸ் நிறுவனத்தின் உரிமையாளரான கல்பாத்தி எஸ் சுரேஷின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ஜோடியாக ஒரே கலரில் உடையணிந்து கலந்து கொண்டுள்ளனர். சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தான் இப்போது இணைய வாசிகளுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

56
Vijay and Trisha Together in Public Event Tamil

முதலில் காரிலிருந்து விஜய் இறங்கி வரும் வரையில் த்ரிஷா காத்துக் கொண்டிருக்கிறார். அதன் பிறகு விஜய் முன் செல்ல அவருடன் இணைந்து த்ரிஷா நடந்து செல்கிறார். மேலும், மேடையில் இருவரும் ஒருவருக்கொருவர் பக்கத்தில் நின்று கொண்டு போஸ் கொடுத்துள்ளனர். இதே போன்று மேடையிலிருந்து இறங்கி வரும் போதும் கூட விஜய் முதலில் வர, அவருக்கு பிறகு த்ரிஷா நடந்து வருகிறார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

66
Vijay and Trisha Together in Wedding Video

இதற்கு முன்னதாக ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் இது போன்று திருமண நிகழ்ச்சிகளில் எல்லாம் ஒன்றாக ஒரே கலரில் உடையணிந்து கலந்து கொண்டனர். மேலும் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories