சிறையில் ரேவதி.. வெளியே சந்திரகலாவின் வன்மம்! கார்த்திக்கிற்கு 'எமன்' ஆகும் சாமுண்டீஸ்வரி - பகீர் திருப்பம்!

Published : Mar 05, 2026, 08:13 PM IST

Revathi Arrested In Karthigai Deepam Serial : கார்த்திகை தீபம் சீரியலில் 1138ஆவது எபிசோடில் சிறையில் கம்பி எண்ணும் கார்த்திக்கை ரேவதி சந்தித்து பேசிய நிலையில் அடுத்து என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

PREV
14
சாமுண்டீஸ்வரி பதவி, கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

Revathi Arrested In Karthigai Deepam Serial : கார்த்திகை தீபம் சீரியலில் தனது அக்காவை பழி வாங்க சந்திரகலா எடுத்த பிளானில் இப்போது வெற்றி பெற்றுள்ளார். ஆம், கோயிலில் கிடைத்த புதையல் நகையை யாருக்கும் தெரியாமல் திருடிச் சென்று தனது மாமா முத்துவேலுவிடம் கொடுத்து கார்த்திக்கின் அம்மா சிலை இருக்கும் இடைத்தில் புதைக்க சொன்னார். இதைத் தொடர்ந்து கார்த்திக் தான் யாரும் இல்லாத போது புதையல் நகையை திருடி சென்றுவிட்டான் என்றும், அதற்கான ஆதாரமும் இருக்கிறது என்று நிரூபித்து தனது அக்கா சாமுண்டீஸ்வரியை நம்ப வைத்தார்.

24
ரேவதி கைது

இதைத் தொடர்ந்து போலீஸ் வரவே புதையல் நகைகளை தான் எடுத்ததாக சொல்லி ரேவதி போலீசில் சரண்டரானார். இதற்கு முக்கிய காரணம், 2 நாட்களில் புதையல் நகைகளை கோயிலில் ஒப்படைக்கவில்லை என்றால் சாமுண்டீஸ்வரியின் பஞ்சாயத்து தலைவர் பறிபோகும். அதோடு, ஊரை விட்டு ஒதுக்கிவைப்பார்கள். இப்படி பல காரணங்கள் இருக்கும் நிலையில் கார்த்திக் சிறைக்கு சென்றால் நகைகளை திருடியது யார் என்று கண்டுபிடிக்க முடியாது.

34
சந்திரகலா சதி

அதனால் கார்த்திக் வெளியில் இருந்தால் திருடனை கண்டிப்பாக பிடித்துவிடலாம் என்பதற்காக ரேவதி தான் திருடியதாக கூறி போலீசில் சரண்டரானார். தனது மகளை போலீசார் கைது செய்துவிட்டதாக வருத்தப்பட்ட சாமுண்டீஸ்வரி இது எல்லாவற்றிற்கும் காரணமான கார்த்திக்கை சும்மா விடமாட்டேன் என்று வெறியோடு இருக்கிறார். மேலும், துப்பாக்கியால் சுட்டு கொல்ல வேண்டும் என்று ஆவேசமாக இருக்கும் நிலையில், பத்திரிக்கையாளர்கள் வீடு தேடி வந்து சாமுண்டீஸ்வரியையும், அவரது அம்மாவையும் நகைகளை திருடி தான் இப்படியொரு வாழ்க்கை வாழ்வதாகவும் பேசினர். அதோடு பத்திரிக்கையிலும் சாமுண்டீஸ்வரியின் புகைப்படத்துடன் போட்டுள்ளனர்.

44
கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்

இதை சந்திரகலா தனது அக்காவிடம் காட்டவே அவரும் ரொம்பவே வருத்தப்பட்டார். அதோடு மன உளைச்சலுக்கும் ஆளானார். இதையெல்லாம் அருகில் நின்று சந்திரகலா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்பதை இன்றைய எபிசோடில் பார்த்து தெரிந்து கொள்வோம். உண்மையான திருடனை கார்த்திக் கண்டுபிடிப்பாரா? ரேவதியை சிறையிலிருந்து மீட்டு வருவாரா என்பது போன்ற பல கேள்விகளுடன் இன்றைய எபிசோடை பார்த்து தெரிந்து கொள்வோம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories