Singapennae Serial Actress Anju Personal Life : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப் பெண்ணே சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் லலிதா அம்மாவின் நிஜ வாழ்க்கை வரலாற்று பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Singapennae Serial Actress Anju Personal Life : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலின் அன்புவின் அம்மாவாக நடிக்கும் லலிதா அம்மாவின் பெயர் அஞ்சு. இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக நடித்து வந்தவர். இவர் வாழ்க்கையில் போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையிலேயே வாழ்ந்து வந்துள்ளார். இவர் உண்மையாகவே ஒரு சிங்கப் பெண் என்றே கூறலாம். அவரது திருமண வாழ்க்கை மிகவும் கசப்பாகவே இருக்கிறது. வாழ்க்கைத் துணையை சரியாக தேர்ந்தெடுக்காத அஞ்சு ஏமாற்றத்தையே சந்தித்தார். இவரது வாழ்க்கையை புரட்டி போட்ட சம்பவங்கள் ஏராளமாக உள்ளது.
26
நடிகை அஞ்சு:
உதிரிப்பூக்கள் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சு. குழந்தை நட்சத்திரமாக மட்டுமே 20க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். உல்லாச பறவைகள், நீயும் நானும், வீராப்பு, பொய் சாட்சி, இந்திர விழா, பொல்லாதவன் என்று பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். இளமையான தோற்றமும், அழகும் தமிழ் சினிமாவில் இவருக்கு மிகுந்த வரவேற்பை பெற்று தந்தது.
36
நம்பி ஏமாற்றம் அடைந்த திருமண வாழ்க்கை:
அஞ்சு ஒரு படப் பிறப்புக்கு சென்ற போது டைகர் பிரபாகரனை பார்த்திருக்கிறார். அவர் காட்டிய அன்புக்கும் அக்கரைக்கு சில வாரங்களிலேயே அடிமையானார். சிறுவயதிலேயே காதலில் அடிமையானார் அஞ்சு. உனது காதல் பெற்றோர்களுக்கும் உடன் பிறந்தவர்களுக்கும் பிடிக்காமல் இருந்திருக்கிறது. பெற்றோர் முதல் நலன் விரும்பிகள் வரை அவர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வேண்டாம் என கூறியும் அஞ்சு, ஓடி போய் டைகரை திருமணம் செய்தார். இப்பொழுது அஞ்சு விற்க்கு 19 வயது ஆன இளம் பெண்ணாகவே இருந்திருக்கிறார்.
46
சிங்க பெண்ணே சீரியல் லலிதா அம்மா
திருமணம் ஆன சில மாதங்களுக்கு பின்னரே டைகரின் உண்மையான வயது, தன்னுடைய அப்பாவை விட அதிகம் என்பது அஞ்சுவுக்கு தெரிய வந்தது. அப்பொழுது அவருக்கு வயது 48 என சொல்லப்படுகிறது. காதலுக்கு கண் இல்லை என்று சொல்வது உண்மைதான் போல அது அஞ்சுவின் வாழ்க்கையில் நடந்துள்ளது. ஏமாற்றம் அடைந்தார் அஞ்சு. தனது அப்பாவை போன்ற ஒரு பெரியவரை கல்யாணம் செய்து கொண்டோமே என்று அவர் மிகவும் வருத்தப்பட்டு சண்டையிட்டு வந்திருக்கிறார். ஏமாற்றம் அடைந்த அஞ்சு மிகுந்த மன உளைச்சலில் இருந்திருக்கிறார்.
56
திருமண வாழ்க்கையில் இருந்து விலகிய அஞ்சு:
காதலுக்கு வயசு முக்கியம் இல்லை என, அதை அஞ்சு பெரிதாக கண்டுகொள்ள வில்லை என்றாலும்... ஏற்கனவே அவருக்கு 3 திருமணம் ஆகி, தன்னுடைய வயதில் ஒரு மகன் இருக்கும் தகவலும் தெரிய வர அதிர்ச்சியில் ஆழ்ந்தார். பின்னர் இருவருக்கும் இடையே சில பிரச்சனைகள் வந்த நிலையில், இனி இவருடன் வாழவே வேண்டாம் என முடிவு செய்து 4 மாத கர்ப்பிணியாக இருக்கும் போது அவரிடம் இருந்து பிரிந்து வந்துள்ளார். அதன் பிறகு அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவருடைய பெயர் அர்ஜூன் என்று சொல்லப்படுகிறது. சிங்கப்பூர் சீரியலில் வரும் அன்புவை போலவே அவர் வாழ்க்கையிலும் ஒரு அர்ஜுன் என்னும் மகன் வாழ்ந்து வருகிறார் உண்மையாகவே இவர் சிங்க பெண்ணாகவே தன் மகனை வளர்த்து வருகிறார்.
66
சின்னத்திரையில் கால் பதித்த அஞ்சு:
19 வயதிலேயே தன்னுடைய வாழ்க்கையை தொலைத்த அஞ்சு, மகனுக்காகவே முழுமையாக வாழ துவங்கி விட்டார். குழந்தை பிறந்த பின்னர் உடல் எடை கூடியதால், சில படங்களில் குணசித்ர வேடத்தில் மட்டுமே நடித்து வந்தார் அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகிய சித்தி சீரியலில் முதல் முறையாக தனது சின்னத்துறை வாழ்க்கையை ஆரம்பித்தார். அகல் விளக்கு,செல்வி, அரசி, மகராசி, ஈரமான ரோஜாவே என்ன பல தமிழ் சின்னத்துறையிலும் நடித்துள்ளார் அதன் பிறகு தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் எனும் அனைத்து சினிமா துறையிலும் இவர் நடித்து வந்துள்ளார். தற்போது சன் டிவியில் சீரியல்களில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சிங்கப் பெண்ணே சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்திரமான அன்புவின் அம்மாவாக இவர் நடித்து வருகிறார்.1988-ல் ‘ருக்மிணி’ என்ற மலையாள படத்திற்காக கேரள மாநில அரசின் சிறந்த நடிகை விருதை பெற்றுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.