விக்ரம் - விஜி ஜோடியும், லாவண்யாவின் வில்லத்தனமும் – விறுவிறுப்பான திரைக்கதைகளுடன் செல்லமே செல்லமே!

Published : Mar 05, 2026, 04:35 PM IST

Chellame Chellame Serial Viji Vikram Chemistry: சன் டிவியில் ஒளிபரப்பாகும் செல்லமே செல்லமே சீரியலில் விக்ரம் மற்றும் விஜி ஜோடியும், லாவண்யாவின் வில்லத்தனமும் காண்போரை கண்கலங்க செய்கிறது. அதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
17
Chellame Chellame Serial Today Episode, செல்லமே செல்லமே இன்றைய எபிசோட்

சன் டிவியில் மாலை ஆறரை மணிக்கு ஒளிபரப்பாகும் செல்லமே செல்லமே சீரியல் தற்போது விறுவிறுப்பான காட்சிகளுடன் பரபரப்பான சூழ்நிலைகளை காட்சிப்படுத்துகின்றன. இந்த சீரியல் தற்போது இல்லத்தரசிகளிடம் மிகுந்த வரவை இப்படி பெற்று வருகிறது. ஏனென்றால் விதியின் கதாபாத்திரம் ஒரு தனி பெண்மணியாக இருந்து ஒரு பெண் குழந்தையை வளர்ப்பதை குறித்து கதை அமர்ந்திருக்கும். அதனாலேயே இந்த சீரியலுக்கு மிகுந்த வரவேற்பை பெற்று தந்தது. ரசிகர்கள் youtube-பில் ஒவ்வொரு காட்சியும் வெளியானதும் தனது விருப்பு,வெறுப்புகளை கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்து வருகின்றனர். அது என்னவென்றால் நல்லதாக இருந்தாலும் சரி கெட்டதாக இருந்தாலும் சரி ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

27
Chellame Chellame Serial Vikram Viji Romance, விக்ரம் விஜி ரொமான்ஸ்,

எப்படி இப்படி எல்லாம் கதைக்களம் உருவாக்குறீங்க: ஒரு நெட்டிசன் ஒருவர் கதைக்களத்தை விறுவிறுப்பாகவும் சமூகத்திற்கு ஏற்றதாகவும் எப்படி இந்த மாதிரியான கதைகளை உருவாக்கிகள் என்று பதிவிட்டுள்ளார். ஒரு டைரக்டர் ஒரு கதையை உருவாக்குவதற்கு மிகுந்த கற்பனையை சரியாக பயன்படுத்தி சரியான முறையில் கதை களத்தை உருவாக்க வேண்டும் என்று கேரக்டரை பாராட்டியுள்ளார்.

37
விஜியை சுந்தரி ஆகவே பார்க்கும் ரசிகர்கள்:

சுந்தரி சீரியலுக்கு பதிலாகவே இந்த செல்லமே செல்லமே சீரியல் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது ஏனென்றால் அதை கணவர் அதை குடும்பம் என்ற சூழ்நிலையை மையமாகக் கொண்டு செல்லமே செல்லமே சீரியலும் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் செல்லமே செல்லமே சீரியலில் விஜி கதாபாத்திரத்தில் வரும் ரேஷ்மாவிற்கு பதிலாக சுந்தரி சீரியலில் வரும் ஏன் கேப்ரியெல்லா செல்லஸ் கதாபாத்திரமே நினைவுக்கு வருவதாக பதிவிட்டுள்ளார். கம் பேக் சுந்தரி என்றும் ஒரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார்.

47
சிறந்த தகப்பனாக இருக்கும் விக்ரம்:

விக்ரமை மறுதிருமணம் செய்ய சொல்லும் போது விக்ரம் அதை தவிர்த்ததை ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாக பதிவிட்டுள்ளார். முடிவை எடுத்துள்ளார் விக்ரம் என்றும் ஒரு சிறந்த அப்பாவாக இருக்கிறார் என்றும் ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

57
நல்லவனுக்கு நல்லவன் விக்ரம் கெட்டவனுக்கு கெட்டவன் கார்த்திக்:

 முதலில் 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சுந்தரி மெகா தொடர் கார்த்திகாக நடித்தவர்தான் விக்ரம். இவர் சுந்தரி சீரியலில் கெட்டவனுக்கு கெட்டவனாக கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆனால் செல்லமே செல்லமே சீரியலில் மிக நல்லவனாகவும் சாந்தமாகவும் நடிப்பதாக ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.

நிலாவின் நடிப்பு மிக அருமை: செல்லமே செல்லமே சீரியலில் மகளாக வரும் நிலா மிகவும் அருமையாக நடிப்பதாகவும் ஒரு குழந்தையின் நடிப்பு இந்த அளவுக்கு இருக்காது என்றும் நேர்த்தியாக நடிக்கிறார் என்றும் பெரியவர்கள் நடிப்பதை விட நிலா மிகவும் அருமையாக நடிக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.

67
Chellame Chellame Serial Cast and Crew, நடிகர்கள் விவரம்,

ஒரு பெண் படும் கஷ்டங்கள்: இந்த சமூகத்தில் ஒரு பெண் தனியாக இருந்து தன் குழந்தையை வளர்ப்பதில் எத்தனை கொடுமைகளையும் இல்லல்களையும் சமாளித்து வருகிறார் என்பதை மிகவும் அழகாக டைரக்டர் காண்பிப்பதாக நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

பெண்களை வேலை வாங்காதீர்கள்: சுந்தரபாண்டியன் மற்றும் லாவண்யாவின் இருவரும் சேர்ந்து விஜி அதிகமாக வேலை வாங்குகிறார்கள் என்றும் பெண்ணை தரக்குறைவாக எண்ண வேண்டாம் என்றும் மூட்டைகளை சுமக்க விட வேண்டாம் என்றும் ஒரு நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

77
ஹாஸ்பிடலிலும் நகை பட்டு புடவைகளை அணிய வேண்டாம்:

 இந்த சீரியலில் வரும் தெய்வானை உடல்நலம் சரியில்லாததால் அவரை ஹாஸ்பிடலில் அனுமதித்துள்ளனர் அங்கேயும் அவர் பட்டுப்புடவை அணிகலன்களுடன் சிகிச்சை அளிப்பது மிகவும் சிரிப்பாக இருப்பதாகவும் அங்கேயும் பட்டுப்புடவை நகைகளை அணிய வேண்டாம் என்றும் நெட்டிசன் ஒருவர் விளையாட்டாக பதிவிட்டுள்ளார்.

அப்பா பொண்ணு சீனு ரொம்ப நல்லா இருக்கு: விக்ரமும் நிலாவும் இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் மிகவும் அருமையாக இருக்கு என்றும் தனது வீட்டில் ஒரு பெண் எப்படி நடத்தப்படுவாள் என்றும் அப்பா தன் பெண்ணை எப்படி பார்த்துக் கொள்வார் என்றும் மிக அருமையாக படமாக்கப்பட்டு இருக்கு என்றும் ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

சேல்ஸ் ஸ்டாப்புகளுக்கு நடக்கும் கஷ்டங்கள்: இந்த சீரியலில் விஜி ஒரு கடையில் சேல்ஸ் ஸ்டாப்பாக நடித்திருப்பார் அதில் நடக்கப்படும் உண்மைகள் அனைத்தையும் அப்படியே சீரியலில் வருகிறது என்றும் அவர்கள் படும் கஷ்டங்களையும், முதலாளிகளிடம் அடிமையாக நடத்தப்படும் செயல்களை சரியாக காண்பிக்கிறீர்கள் என்றும் தனது வருத்தங்களை கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்துள்ளார் ரசிகர்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories