Ileana Dcruz One and Only Success Movie is Nanban : தமிழில் அறிமுகமான முதல் படமே தோல்வி, பிறகு ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் நடித்து ஹிட் கொடுத்து சினிமாவில் வலம் வந்த நடிகை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தெலுங்கு சினிமாவில் நடித்த 2ஆவது படமான போக்கிரி படமே சூப்பர் டூப்பர் ஹிட். இந்தப் படம் கொடுத்த வரவேற்பு தமிழில் கேடி படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் தமன்னாவும் நடித்த நிலையில், 2 ஹீரோயின் சப்ஜெக்ட் மற்றும் கதையின் காரணமாக படம் தோல்வியடைந்தது. அதன் பிறகு அவர் நடித்த எந்தப் படமும் ஹிட் கொடுக்கவில்லை.
24
Ileana D'Cruz career history Tamil
அப்போது தான் இயக்குநர் ஷங்கர் தமிழ் சினிமாவில் ஒரு வாய்ப்பு கொடுத்தார். ஆம், விஜய், சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிப்பில் வந்த நண்பன் படத்தில் நடித்து டாப் நடிகையாக வலம் வந்தார். இந்தப் படம் இலியானாவின் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. இந்தப் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
34
Ileana continuous flops after Pokiri
தெலுங்கு சினிமாவிலும் நடித்த படங்கள் எல்லாம் தோல்வி படமாகவே, ஹிந்தி பக்கம் போனார். அங்கும் அவருக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை. ஓரிரு படங்கள் மட்டுமே நடித்தார். அந்தப் படமும் தோல்வியடையவே ராசியில்லாத நடிகையாக முத்திரை குத்தப்பட்டார். சினிமாவிலிருந்து விலகிய இலியானா, மைக்கேல் டோலன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இப்போது 2 குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார்.
44
ராசியில்லாத நடிகை என முத்திரை
இலியானாவைப் போன்று தான் நடிகை பூஜா ஹெக்டேவும் தமிழில் இருந்தார். அவர் தமிழில் அறிமுகமான முதல் படமான முகமூடி படம் தோல்வி படமாக அமைந்தது. சினிமாவில் அறிமுகமான முதல் படமும் இந்தப் படம் தான். அதன் பிறகு 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வந்து பீஸ்ட் படத்தில் நடித்து பிரபலமானார். இப்போது டிரெண்டிங் நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளிலும் ஒருவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.