சின்னத்திரை நடிகை சித்ரா இறந்தது எப்படி? நிபுணர் குழு பரபரப்பு அறிக்கை..!

First Published Feb 2, 2021, 1:20 PM IST

சின்னத்திரை நடிகை சித்ரா உண்மையில் தற்கொலை செய்து கொண்டு தான் இறந்தாரா? என்கிற சந்தேகம், சித்ராவின் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள் மத்தியில் இருந்த நிலையில், நிபுணர் குழு பரபரப்பு அறிக்கை ஒன்றை அளித்துள்ளதாக காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
 

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளைக் கொண்ட விஜே சித்ரா, கடந்த 9ம் தேதி பூந்தமல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
undefined
சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் ஹேம்நாத்திற்கும், சித்ராவிற்கும் இடையே கடந்த அக்டோபர் மாதம் பதிவு திருமணம் நடந்திருந்தால் ஆர்.டி.ஓ.விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
undefined
இதனிடையே சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார் சித்ராவின் தற்கொலை குறித்து ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ விசாரணையை தொடங்கினார்.
undefined
முதற்கட்டமாக சித்ராவின் குடும்பத்தினரிடமும், அதன் பின்னர் கணவர் ஹேமந்த், மாமனார், மாமியார், சக நடிகர், நடிகைகள், நெருங்கிய நண்பர்கள், ஓட்டல் ஊழியர்கள், உதவியாளர் ஆனந்த் என பலரிடமும் நடைபெற்ற விசாரணை, நடந்து முடிந்தது.
undefined
சித்ராவின் மரணம் தொடர்பான ஆர்.டி.ஓ.விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், சித்துவின் தாயார் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு கோரிக்கை மனு ஒன்றை கொடுத்திருந்தார். அதில் சித்ராவின் வழக்கை போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என்றும், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
undefined
இந்நிலையில் சித்ராவின் மரணம் தொடர்பாக 15 பேரிடம் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்ய ஸ்ரீ நடத்திய விசாரணை குறித்து 16 பக்க அறிக்கை போலீசாரிடம் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் வரதட்சணை கொடுமையால் சித்ரா தற்கொலை செய்து கொள்ளவில்லை என உறுதி செய்யப்பட்டது.
undefined
இந்நிலையில் சித்ராவின் தற்கொலை வழக்கை விசாரித்து வந்த நிபின்னர் குழு, சித்ரா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என அறிக்கை அளித்துள்ளதாக காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
undefined
மேலும் இந்த வழக்கின் தொடர்பான விசாரணையை வரும் பிப்ரவரி 5ம் தேதி தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
undefined
click me!