Top 10 Heroines : மோதும் சமந்தா ! முரண்டு பிடிக்கும் பூஜா ஹெக்டே..!! NO. 1 கவர்ச்சிக்கன்னி யார்?

Kanmani P   | Asianet News
Published : Dec 29, 2021, 08:50 AM ISTUpdated : Dec 29, 2021, 10:04 AM IST

Actress album : 2021-ல் இளைஞர்களின் மனம் கவர்ந்த டாப் 10 நடிகைகள்...  சூப்பர் ஹிட் அடித்த நடிகைகளின் புகைப்பட தொகுப்பு...

PREV
110
Top 10 Heroines : மோதும் சமந்தா ! முரண்டு பிடிக்கும் பூஜா ஹெக்டே..!! NO. 1 கவர்ச்சிக்கன்னி யார்?
samantha

நடிகை சமந்தா....

நடிகை சமந்தா விவாகரத்துக்கு பின்னர், சர்ச்சை கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதுடன்... சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத புகைப்படங்களையும் வெளியிட துவங்கியுள்ளார். சமந்தா, தண்ணீரின் நடுவே அமர்ந்து சூடேற்றும் கவர்ச்சி பிகினி உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது தாறுமாறாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

210
Pooja Hegde

பூஜா ஹெக்டே...

தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் பூஜா ஹெக்டே. தற்போது தமிழில் விஜய் ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியான பிறகு இவரது மவுசு எங்கோ போய் விட்டது. அதோடு இவர் மாலத்தீவில் இவர் எடுத்த பிகினி உடை புகைப்படம் இளைங்கர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

310
malavika mohanan

மாளவிகா மோகனன்... 

விதவிதமான ஆடையில் கவர்ச்சி காட்டி இளம் நெஞ்சங்களை இம்சித்து வரும் நடிகை மாளவிகா மோகனன் (Malavika Mohanan). 'மாஸ்டர்' பட நாயகியான மலையாள பைங்கிளி மாளவிகா மோகனன் தற்போது தமிழ்,இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். ஐவரும் விஜய்க்கு ஜோடியான பின்னரே ரசிகர்களால் அதிகமாக கவனிக்கப்படுகிறார்.

410
rashmika mandanna

ராஷ்மிகா மந்தனா....

2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna). மிக குறுகிய நாட்களிலேயே முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடித்துவிட்டார். இவர் நடித்த சமீபத்தில் வெளியான புஷ்பா தாறுமாறு வெற்றியை பெற்று வருகிறது. இதற்கிடையே தனது கவர்ச்சி புகைப்படங்களாலும் ஆளை அள்ளும் சைகைகள் மூலமும் ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறார் ரஷ்மிகா. 

510
AmalaPaul

 அமலா பால்...

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார் அமலாபால்.  யாரும் எதிர்பாராத அளவிற்கு கவர்ச்சி காட்டி வரும், அமலா பால் (Amala Paul) தற்போது... கலரிங் செய்த ஹேர்ரில்... ஒரு தினுசா கொடுத்துள்ள கிளாமர் போஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. விவாகரத்துக்கு பின்னர் தன்னை சுதந்திர பறவை போல் பீல் செய்யும் அமலா பால், தன்னுடைய மனதிற்கு பிடித்ததை தேடி தேடி செய்கிறார். இவற்றில் சில சர்ச்சையாகவும் மாறி விடுகிறது.

610
sai pallavi

சாய் பல்லவி....
நடிகை சாய் பல்லவி (Sai Pallavi), எந்த உடை அணிந்தாலும் சும்மா நச்சுனு தன்னுடைய அழகை வெளிப்படுத்தி காட்டுபவர். 2015ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் மலையாள திரைப்படம் "பிரேமம்". இந்தப்படம் மலையாளத்தைக் கடந்து தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. "பிரேமம்" படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் தொடங்கிய சாய் பல்லவியின் திரைப்பயணம் தற்போது வரை வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது.  தமிழில் ரவுடி பேபி பாடலுக்கு நடனமாடிய பிறகு இவரது புகழ் உச்சத்தை தொட்டுள்ளது.

710
Yashika Aannand

 யாஷிகா ஆனந்த்...

இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி போன்ற படங்களில் நடித்த யாஷிகா ஆனந்த், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டபின் மிகவும் பிரபலமானார். இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் யாஷிகா, கடந்த ஜூலை மாதம் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். சுமார் 4 மாதமாக படுத்த படுக்கையாக இருந்த யாஷிகா, தற்போது தான் எழுந்து நடக்கும் அளவுக்கு குணமாகி உள்ளார். மீண்டும் தனது கவர்ச்சி புகைப்பட சூட்டிங்கை துவங்கியுள்ளார்.

810
Aathmika

ஆத்மீகா...

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் மீசையை முறுக்கு படத்தின் மூலம் அறிமுகமான ஆத்மீகா இந்த படத்தில் நிலா என்னும் பெயரில் நடித்திருப்பார். ஆனந்த் கிருஷ்ணன் இயக்கித்தில் சமீபத்தில் வெளியான அரசியல் படமான "கொடியில் ஒருவன்" படத்திழும் தோன்றியிருந்தார் ஆத்மீகா. இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வரும் ஆத்மீகா தற்போது போஸ்ட் செய்துள்ள ஹாட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

910
Keerthy suresh

 கீர்த்தி சுரேஷ்....

நடிகை நயன்தாரா, சமந்தாவை அடுத்து, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் நடிகர்கள் ஜோடி போட ஆசை படும் நடிகையாக உருவெடுத்துள்ளவர் கீர்த்தி சுரேஷ். அறிமுகமாகும் போது, தாளுக்கு மொழுக்கு என இருந்த இவர், பாலிவுட் வாய்ப்புகள் கூட தேடி வந்ததால், கடுமையான உடல் பயிற்சி மற்றும் டயட் இருந்து உடல் எடையை பாதியாக குறைத்து, தற்போது செம்ம ஸ்லிம்மாக மாறியுள்ளார். குறிப்பாக தற்போதைய இவரது உடல்கட்டுக்கு எந்த உடை அணிந்தாலும் சும்மா நச்சுனு பொருந்துகிறது. இவரது புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகி வருகிறது.
 

1010
rakul preet singh

ரகுல் பிரீத்தி சிங்...

ரகுல் பிரீத்தி சிங் நடிகர் கார்த்தியின் ஜோடியாக நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' மிகப்பெரிய வெற்றி பெற்றது. பின் சூர்யாவுடன் "என்.ஜி.கே." , கார்த்தியுடன் "தேவ்"உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்தார். பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2, படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'அயலான்' ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். இடையில் பாலிவுட்டையே உலுக்கிய போதைப்பொருள் பிரச்சனையில் ரகுல் ப்ரீத் சிங் பெயரும் அடிபட, அவரிடமும்  போதை தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.  அந்த பிரச்சனைகளில் இருந்து  சற்றே தள்ளி இருக்க முடிவு செய்த ரகுல் ப்ரீத் சிங் கிடைத்த ஓய்வு நேரத்தை மாலத்தீவில் ஜாலியாக கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
 

Read more Photos on
click me!

Recommended Stories