selvaraghavan Tweet : சிம்புவின் ‘மாநாடு’ படக்குழுவினரிடம் மன்னிப்பு கேட்ட செல்வராகவன் - ஏன் தெரியுமா?

Ganesh A   | Asianet News
Published : Dec 28, 2021, 10:02 PM IST

மாநாடு திரைப்படம் அண்மையில் ஓடிடி-யில் வெளியானது. அதில் படத்தை பார்த்த பிரபல இயக்குனர் செல்வராகவன், டுவிட்டர் வாயிலாக படக்குழுவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

PREV
17
selvaraghavan Tweet : சிம்புவின் ‘மாநாடு’ படக்குழுவினரிடம் மன்னிப்பு கேட்ட செல்வராகவன் - ஏன் தெரியுமா?

சிம்புவின் படங்கள் என்றாலே பிரச்சனைகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்தது தான், அந்த வகையில் பல சர்ச்சைகளுக்கும், பிரச்சனைகளுக்கும் மத்தியில், கடந்த மாதம் 25-ந் தேதி வெளியான திரைப்படம் 'மாநாடு'. 

27

வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். ரிலீசுக்கு முன்னர் பல்வேறு தடைகளை சந்தித்த இப்படம், அதன் வெற்றியால் அவை அனைத்தையும் தவிடுபொடி ஆக்கியது. 

37

சிம்புவின் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இப்படத்தை கொண்டாடினர். தற்போது 25 நாட்களை கடந்து இப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. 

47

சிவகார்த்திகேயன், அனிருத், ஹரிஷ் கல்யாண், ராகவா லாரன்ஸ், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட பிரபலங்களும் மாநாடு படக்குழுவினரை வெகுவாக பாராட்டினர். 

57

அதேபோல் நடிகர் ரஜினிகாந்த், வெங்கட் பிரபு, சிம்பு, எஸ்.ஜே.சூர்யா உள்பட படக்குழுவினரை தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தார்.

67

மாநாடு திரைப்படம் அண்மையில் ஓடிடி-யில் வெளியானது. அதில் படத்தை பார்த்த பிரபல இயக்குனர் செல்வராகவன் படக்குழுவை பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “தாமதமாய் “மாநாடு“ பார்த்ததிற்கு மன்னிக்கவும். ரசித்து பார்த்தேன். 

77

சிம்பு, எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அருமை. நண்பர்கள் யுவன், வெங்கட் பிரபு  மற்றும் படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இது விடாமுயற்சிக்கும், அயராத உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி” என பாராட்டி உள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories