போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் (Ajith) நடித்துள்ள படம் வலிமை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
210
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார்.
310
மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அஜித்தின் தாயாக ஜெயசுதா நடித்துள்ளார்.
410
இதுதவிர மற்றொரு முக்கிய கதாபாத்திரமான அஜித்தின் தம்பி வேடத்தில் ராஜூ ஐய்யப்பா நடித்துள்ளார். அமராவதி படத்தில் அஜித்தின் நண்பராக நடித்த பானு பிரகாஷின் மகன் தான் ராஜூ ஐயப்பா என்பது குறிப்பிடத்தக்கது.
510
நீரவ் ஷா ஒளிப்பதிவாளராகவும், திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணியாற்றி உள்ளனர். அஜித் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
610
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பின்னணி இசை உள்ளிட்ட வேலைகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
710
அஜித்திவலிமை (Valimai) திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
810
தமிழில் தயாராகி உள்ள இப்படத்தை தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
910
இந்நிலையில், வலிமை அஜித்தின் விதவிதமான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
1010
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அஜித்கும மிகவும் ஸ்டைலிஷாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.